ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட் நடப்பு சீசனில் மிகவும் மோசமாக அமைந்துள்ளது. 27 வயதான ரிஷப் பண்ட், நடப்பு தொடரில் 3 இன்னிங்சில் விளையாடி மொத்தமாகவே 17 ரன்கள் என்பது தான் அடித்திருக்கிறார். இதில் ஒரு டக் அவுட் அடங்கும்.
சராசரியாக வெறும் ஐந்து ரன்கள் அளவில் இருக்கிறது. அவனுடைய ஸ்ட்ரைக் ரேட் 65 என்ற அளவில் இருக்கிறது. இது லக்னோ அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் ஆட்டம் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ரிஷப் பண்ட் குறித்து அட்வைஸ்:
“ஐபிஎல் போட்டிகளில் ரிஷப் பண்ட் களத்தில் பெரிய அளவில் எதையும் செய்ய முடியாமல் இருக்கின்றார். பேட்டிங்கில் ரிஷப் பண்ட் ஆட்டம் மிகவும் அமைதியான முறையில் இருக்கிறது. ரிஷப் பண்ட் விரைவில் ஆட்டம் இழப்பதை தடுக்க ஒரு வழியை லக்னோ அணி கண்டுபிடித்தாக வேண்டும்.”
“ரிஷப் பண்ட் ஆட்டம் இம்முறை மிகப் பெரிய அதிர்ச்சியாக லக்னோ அணிக்கு அமைந்திருக்கிறது. டாசை இழந்த பிறகு லக்னோ அணி திடீரென்று நகராமல் சிக்கிக் கொள்கிறது. லக்னோ அணி வெற்றி பெற தேவையான இலக்கை எட்டுவதுமில்லை. இது அவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும்.”
“நிக்கோலஸ் பூரான் லக்னோ அணிக்காக பிரமாதமாக நடைபெறுகிறார். ஆனால் நேற்று ஆட்டத்தில் அவர் சாகல் பந்துவீச்சின் சிக்கி ஆட்டம் வழங்கப்படும். லக்னோ அணியின் பேட்டிங் உடைந்து விட்டது என்று சொல்ல வேண்டும். ஒரு நல்ல இலக்கை கொண்டு சென்றார்கள்”
பஞ்சாப் அணிக்கு பாராட்டு:
“அந்த கௌரவமான இலக்கை வைத்து தவிர அதை வெற்றிகரமாக தற்காத்துக் கொள்வது என்பது மிகவும் கடினமானதாக ஒன்று. இதுதான் பஞ்சாப் அணியில் பேட்டிங் அவ்வளவு பிரமாதமாக இருந்தது. லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மூலம் பஞ்சாப் எப்படி அபாரமாக விளையாடுகிறார்கள் என்று தெரிந்தது.”
இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. ஆரஞ்ச் தொப்பிக்கான பந்தயம்.. ஒரே இன்னிங்சில் 12 இடம் முன்னேறிய ஸ்ரேயாஸ்.. யார் முதலிடம்?
“ஒரு வழியாக பஞ்சாப் அணி ஒரு நல்ல அணியை கட்டமைத்திருக்கிறார்கள். பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் இளைஞர்களை நல்ல முறையில் ஊக்கி வித்து வருகிறார்” என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார். புள்ளி பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் ஆர் சி பி,பஞ்சாப், டெல்லி ஆகிய மூன்று அணியினரும் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.






