ஐபிஎல் 2025.. ஆரஞ்ச் தொப்பிக்கான பந்தயம்.. ஒரே இன்னிங்சில் 12 இடம் முன்னேறிய ஸ்ரேயாஸ்.. யார் முதலிடம்?

0
17

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பேட்ஸ்மேன்கள் அதிக அளவு ரன்களை குவித்து வருகிறார்கள். இதனால் ஆரஞ்சு தொப்பிக்கான பந்தயம் சூடு பிடித்திருக்கிறது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலே ஆரஞ்சு தொப்பி மாறும் அளவிற்கு கடும் சவாலாக இம்முறை ஐபிஎல் தொடர் அமைந்துள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ், முதல் போட்டியில் 97 ரன்கள் எடுத்த நிலையில் தற்போது லக்னோ அணிக்கு எதிராக 52 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த ஸ்ரேயாஸ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

- Advertisement -

டாப் 5 வீரர்கள் யார்?

தற்போது முதல் இடத்தில் லக்னோ அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரான் மட்டுமே இருக்கின்றார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரான் அரை சதத்தை ஆறு ரன்களில் தவறவிட்டார். இதேபோன்று மிட்செல் மார்ஸ் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில், அவர் முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் முதல் பந்திலே ஆர்ஸ்தீப் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். இந்த சூழலில் நிக்கோலஸ் பூரான் மூன்று இன்னிங்ஸில் 189 ரன்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கின்றார். ஸ்ரேயாஸ்,  இரண்டு இன்னிங்ஸில் 149 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்திலும், சாய் சுதர்சன் இரண்டு இன்னிங்ஸில் 137 ரன்கள் அடித்து மூன்றாம் இடத்திலும் சன்ரைசர்ஸ் வீரர் டிராவிஸ் ஹெட் மூன்று இன்னிங்ஸில் 136 ரன்கள் அடித்து நான்காம் இடத்திலும், மிட்செல் மார்ஸ் 3 இன்னிங்ஸில் 124 ரன்கள் எடுத்து ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

- Advertisement -

விராட் கோலிக்கு வாய்ப்பு இருக்கா?

இந்த நிலையில் இன்று குஜராத் மற்றும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி நடைபெறுகிறது. தற்போது சாய் சுதர்சன் 137 ரன்கள் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இந்த ஆட்டத்தில் அவர் 53 ரன்கள் எடுத்தால் நிக்கோலஸ் பூரான் இடம் இருக்கும் ஆரஞ்சு தொப்பியை அவர் வென்று விடுவார். குஜராத் அணியின் விக்கெட் கீப்பரான ஜாஸ் பட்லர் 93 ரன்கள் உடனும், கேப்டன் கில் 71 ரன்களும் எடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க : அடிச்சு சொல்றேன்.. ரிக்கி பாண்டிங் சொல்லாம பிரப்சிம்ரனின் அந்த விஷயம் நடந்திருக்காது – மைக்கேல் வாகன் பேச்சு

இன்றைய ஆட்டத்தில் இவர்கள் பெரிய ஸ்கோரை அடித்தால் டாப் 5 இடத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ஆர் சி பி அணி விளையாடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், முதல் 10 இடத்தில் எந்த ஒரு வீரரும் இல்லை. விராட் கோலி 90 ரன்கள் உடனும், பில் சால்ட் 88 ரன்களுடனும் ரஜத் பட்டிதார் 88 ரன்களுடனும் இருக்கிறார்கள்.
இன்று பெங்களூரில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் இந்த மூன்று வீரர்களும் பெரிய ஸ்கோர் அடித்தால் இவர்களும் டாப் ஐந்து இடத்திற்குள் செல்லலாம்.

- Advertisement -