ஐபிஎல் 2025.. சிஎஸ்கே, மும்பை கிடையாது.. இந்த 2 அணிகள் தான் பைனலுக்கு வரும்.. இந்திய வீரர் கணிப்பு

0
31

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் நாளை முதல் கொல்கத்தா நகரில் தொடங்குகிறது.  முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன கேகேஆர் அணி பலம் வாய்ந்த ஆர் சி பி அணியுடன் பல பரிட்சை நடத்துகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் லீக் சுற்றில் போட்டி போடும்.

இதில் அதிக புள்ளிகளை பெறும் நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். 10 அணிகளில் இருந்து நான்கு அணிகள் மட்டும்தான் அடுத்த சுற்றுக்கு செல்லும் என்பதால் போட்டி மிகவும் நெருக்கடி வாய்ந்ததாக இருக்கும். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு எந்த இரண்டு அணி வரும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விகாரி கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணி எது?

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,” சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் தொடரில் ஒரு பென்ச் மார்க்கை நிர்ணயித்து இருக்கிறது. இதற்கு அந்த அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அணி நிர்வாகத்தினரை தான் பாராட்ட வேண்டும்.  அணி வீரர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கி இருக்கிறார்கள்.
இந்த சீசனிலும் இதே போன்ற ஒரு அதிரடி ஆட்டத்தை தான் ஹைதராபாத் அணி மேற்கொள்ளும் பஞ்சாப் அணியும் இம்முறை பலமாக இருக்கிறது.”

“ஐபிஎல் கோப்பையை வென்ற ஸ்ரேயாஸ், இம்முறை கேப்டனாக இருக்கிறார். இன்னும் நல்ல பயிற்சியாளராக விளங்குகிறார். இதை தவிர மேக்ஸ்வெல், ஜோஸ் இங்கிலீஷ், மார்கஸ் ஸ்டோனிஸ் போன்ற பேட்ஸ்மேன்களும் உள்ளனர். இதனால் இம்முறை சன்ரைசர்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என நான் நினைக்கின்றேன்.”

- Advertisement -

300 ரன்களுக்கு மேல் குவிக்கும்:

“இம்முறை சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு ஆட்டத்தில் 300 ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் இசான் கிஷன் வருகைக்குப் பிறகு மேலும் பலம் வாய்ந்ததாக அதிகரித்திருக்கிறது. அதேபோன்று தொடக்க வீரர்களா நல்ல தொடக்கத்தை அளிப்பார்கள். இதேபோன்று நடுவரிசையில் ஹென்றிச் கிளாசன் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் விளையாடுவார்கள்.”

இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. 3வது புதிய பந்து விதியை அறிமுகம் செய்த பிசிசிஐ.. இது யாருக்கு சாதகம்? பேட்டர்ஸ்? பவுலர்ஸ்?

“இதன் மூலம் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் பவுண்டரி எல்லைக்கோடும் தூரம் குறைவாக இருந்தால் சன்ரைசர்ஸ் அணி 300 ரன்களை எட்டும்” என்று ஹனுமா விகாரி கூறியுள்ளார். ஹனுமா விகாரி சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருப்பதால் அந்த அணி மீண்டும் இறுதிப் போட்டிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -