ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் சனிக்கிழமை நாளை முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்காக 10 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த சூழலில் இம்பேக்ட் வீதி காரணமாக கடந்த சீசனில் அதிக அளவு ரன்கள் குவிக்கப்பட்டது.குறிப்பாக 250 ரன்கள் மேல் 9 முறை கடந்த சீசனில் அணிகள் அடித்தன.
பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக விதிகள் இருப்பதால் அது ரசிகர்களிடையே அயர்ச்சியை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் நடைபெறுகிறது. இரவு நேரங்களில் வட இந்தியா மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இரவு பனிப்பொழிவு இருக்கும். இதன் காரணமாக டாஸ் என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
புதிய விதியால் சாதகம்:
முதலில் பந்து வீசும் அணிக்கு வெற்றி வாய்ப்பு ஏற்படுகிறது. இதனை மாற்றும் விதமாக தற்போது பிசிசிஐ ஒரு புதிய விதியை கொண்டு வந்திருக்கிறது. அதாவது இரவு நேரத்தில் நடைபெறும் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பதினோராவது ஓவரின் போது நடுவர்கள் பந்தை சோதிப்பார்கள்.
அப்போது பந்து ஈரமாக இருந்தால் புதிய பந்தை மாற்ற நடுவர்கள் முடிவு எடுப்பார்கள். இந்த புதிய விதி தற்போது யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை பார்க்கலாம். பந்து ஈரமாக இருந்தால் அதை வைத்து சுழற் பந்துவீச்சாளர்களோ வேகப்பந்துவீச்சாளர்களோ நினைத்த மாதிரி வீச முடியாது
இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி இரண்டாவது ஆக பேட்டிங் செய்யும்போது சேஸ் செய்வார்கள்.
சிஎஸ்கேவுக்கு ஏற்பட்ட பாதிப்பு:
தற்போது 11 வது ஓவருக்கு பிறகு புதிய பந்து வழங்கப்பட்டால் அது நிச்சயம் பந்து வீசும் அணிக்கு தான் சாதகமாக இருக்கும். இதன் மூலம் சுழற் பந்துவீச்சாளர்கள் வேக பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியை கொடுக்க முடியும். இதை விளக்க வேண்டும் என்றால் கடந்த ஆர் சி பி, சி எஸ் கே அணி மோதிய ஆட்டத்தில் தோனி அடித்த சிக்ஸர் காரணமாக பந்து தொலைந்து விடும்.
இதையும் படிங்க: 204 ரன் வெறும் 16 ஓவர்.. மாஸ் காட்டிய பாகிஸ்தான்.. நவாஸ் அதிரடி சதம்.. நியூசி அணி சொந்த மண்ணில் தோல்வி
அந்த பந்து ஈரப்பதமாக இருந்தது. இதனால் புதிய பந்து ஆர்சிபி அணிக்கு வழங்கப்படும். அதனை வைத்துக்கொண்டு யாஷ் தயால் அபாரமாக வீசி தோனியின் விக்கெட்டை எடுப்பார். சில சமயம் இது பேட்ஸ்மன்களுக்கும் சாதகமாக அமையலாம். பந்து பழையதாக மாறினால் அது பேட்டர்ஸ்க்கு சரியாக வராது. இப்படி இருக்கும் போது புதிய பந்து கொடுக்கும் போது அதில் பேட்ஸ்மேன்களும் ரன்கள் சேர்க்கலாம். இதனால் இந்த புதிய விதி எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.






