ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதற்கு மிகவும் முக்கிய காரணமாக ஒரு கிரிக்கெட் அனலிஸ்ட் இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.ஆம் இங்கிலாந்து சேர்ந்த பிரடி என்ற பத்திரிக்கையாளரும் கிரிக்கெட் அனாலிஸ்டும் தான் இந்த ஆர் சி பி அணியின் மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
கிரிக்கெட் 2.0 என புத்தகம் ஒன்றை கடந்த சில ஆண்டுக்கு முன்பு பிரெடி எழுதியிருந்தார். அதில் ஆர் சி பி அணி குறித்து அவர் ஒரு சாப்ட்டரே எழுதியிருக்கிறார். அதில் ஆர்சிபி அணி என்ன மாதிரி தவறுகளை செய்கிறது என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஆர் சி பி அணியில் பல அதிரடி வீரர்கள் இருந்த நிலையில், நார்தன் குட்டர் நைல் என்ற ஆஸ்திரேலிய பவுலருக்கு காயம் ஏற்பட்டு இருந்திருக்கிறது.
இதனால் அவருக்கு பதில் வேறொரு வேகப்பந்துவீச்சாளரை ஆர் சி பி அணி சேர்க்காமல் அதிரடி ஆல்ரவுண்டரான கோரி ஆண்டர்சனை ஆர்.சி.பி அணி சேர்த்து இருந்திருக்கிறது.அதற்கு முன்பு டி20 கிரிக்கெட்டில் தன் வாழ்க்கையிலே 29 ஓவரை தான் அவர் வீசி இருந்திருக்கிறார். இது குறித்து அப்போதைய பயிற்சியாளரான டேனியல் விட்டோரி கூறுகையில்,கோரி ஆண்டர்சனின் அதிரடி எங்கள் அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும் என்று தெரிவித்திருந்திருக்கிறார்.
ஆனால் அந்த சீசனில் மூன்று போட்டிகளில் கடைசி ஓவர் கோரி ஆண்டர்சன் வீசி இருக்கிறார். இந்த மூன்று போட்டியிலும் ஆர்சிபி அணி அதிக ரன்களை விட்டுக் கொடுத்து தோல்வியை சந்திக்க நேரிட்டிருக்கிறது. ஆர் சி பி அணி இதுபோன்ற தவறுகளை அதிகம் செய்வதால், தான் அந்த அணி தோற்று இருக்கிறது என்று பிரெடி குறிப்பிட்டு இருந்தார்.
இப்படி கிரிக்கெட்டை அக்கு வேறு ஆணிவேராக அலசும் பிரடியை ஆர் சி பி அணி தங்களது அணியின் அனலிஸ்ட் ஆக சேர்த்தது. இதில் அவர் சிறப்பாக பணியாற்றி ஆர் சி பி அணியில் பல மாற்றங்களை செய்து இருக்கிறார். குறிப்பாக rcb செய்யும் முட்டாள்தனமான தவறுகளை அவர் சரி செய்து இருக்கிறார்.
இதையும் படிங்க: படிதார்கிட்ட ஆச்சரியப்படுற விஷயம் இதுதான்.. இந்த பையன் களத்துல செஞ்சது அற்புதம் – சுனில் கவாஸ்கர் பாராட்டு
எந்த வீரர் பந்து வீச வேண்டும் எந்த வீரர் பவர்பிளேவில் பந்து வீச வேண்டும், நடு ஓவர்களில் யார் பந்து வீச வேண்டும் என்பது குறித்து எல்லாம் அவர் தனது கருத்துக்களை தெளிவுபடுத்திருக்கிறார். மேலும் ஆர்சிபி அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு போன்ற யுக்திகளையும் பிரெடி வகுத்திருக்கிறார். அவருடைய வருகைக்குப் பிறகுதான் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருப்பதாக பல கிரிக்கெட் ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் போன்றவர்களும் ஆர் சி பி அணியின் இந்த திருப்புமுனைக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள்.