ஐபிஎல் 2025.. சிஎஸ்கே பந்தை சேதப்படுத்தியதாக புகார்.. வெளியான ஆதாரம்.. சிக்கலில் கலீல் அகமது, ருதுராஜ்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தாங்கள் விளையாடிய முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக மும்பை அணி சீசனின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதே இல்லை என்ற சோகமான சாதனையும் தொடர்கிறது.

- Advertisement -

இந்த தருணத்தில் சிஎஸ்கே அணியின் தீபக்சாகர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று விட்டார். இதனால் அவருக்கு பதிலாக கலீல் அகமத் என்ற இந்திய வேகப்பந்துவீச்சாளரை சிஎஸ்கே அணி வாங்கியது. கலீல் அஹமத் இந்திய அணிக்காக ஏற்கனவே விளையாடி உள்ள நிலையில் அவருக்கு அதன்பின் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கலீல் அகமது அபார பந்துவீச்சு:

இந்த சூழலில் சிஎஸ்கே அணியில் கலீல் அகமத் இடம் பிடித்து மும்பைக்கு எதிராக அபாரமாக விளையாடினார். தான் வீசிய முதல் ஓவரிலேயே ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய கலீல் அகமத் இரண்டாவது ஓவரில் ரியான் ரிக்கல்டன் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

கலீல் அகமது வீசிய பந்தை மும்பை அணி வீரர்களால் தொட கூட முடியாமல் தடுமாறி வந்தனர். கலீல் அஹ்மத் அபாரமாக பந்து வீசி நல்ல தொடக்கத்தைப் பெற்று இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் இயன் பிஸப் பாராட்டி இருந்தார். இந்த சூழலில் தான் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -

பந்தை சேதப்படுத்தியதாக புகார்:

அதில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ், கலீல் அகமதும் பந்தை வீசுவதற்கு முன்பு ஏதோ பாக்கெட்டில் இருந்து எடுத்து கைமாற்றிக் கொண்ட ஆதாரம் வெளியாகி இருக்கிறது. இதுதான் தற்போது சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இதனை குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் சிஎஸ்கே அணி பந்தை சேதப்படுத்தி ஏமாற்றி வென்று விட்டதாக குற்றச்சாட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. தோனி மட்டுமல்ல, ஜடேஜாவிடமும் பேட்டால் அடிவாங்கிய தீபக் சாஹர்.. என்ன நடந்தது?

சிஎஸ்கே வீரர்  கலீல் அகமத் மற்றும் கேப்டன் ருதுராஜ் ஆகியோர் இடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிஎஸ்கே வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது உண்மை என்றால் இந்த சீசன் முழுவதும் அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து சிஎஸ்கே தரப்பு மும்பை தரப்பு எந்த ஒரு ரியாக்சனும் இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts