ஐபிஎல் 2025.. தோனி மட்டுமல்ல, ஜடேஜாவிடமும் பேட்டால் அடிவாங்கிய தீபக் சாஹர்.. என்ன நடந்தது?

0
19

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அபார வெற்றியை பெற்றனர். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு தங்களுடைய முதல் போட்டியில் வெற்றி பெற்றதில்லை என்ற சோகமான சாதனை தொடர்கிறது.

இந்த சூழலில் ஐபிஎல் மெகா ஏலம் மூலம் பல வீரர்கள் பல அணிகளை விட்டு சென்றிருக்கிறார்கள். இதில் சிஎஸ்கே அணியின் தீபக்சாகர் மிட்செல் சான்ட்நர், ஆகியோர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்கள். சிஎஸ்கே அணியின் மிகவும் முக்கியமான வீரராக கருதப்பட்ட தீபக்சாகர் அண்மைக்காலமாக உடல் தகுதி சரியாக இல்லாததால் அணியை விட்டு நீக்கப்பட்டார்.

- Advertisement -

தோனியை வம்பிழுத்த தீபக் சாஹர்:

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தீபக்சாகர் வாங்கியது. இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீபக்சாகர் வந்தவுடன் சிஎஸ்கே அணி வீரர்களிடம் வம்பு இழுக்கும் வகையில் நடந்து கொண்டார். ஆனால் இதை அவர் விளையாட்டாக தான் செய்தார். தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவரிடமே சென்று நான் எங்கு பில்டிங் நிற்கட்டும் என கேட்டு வம்பு இழுத்தார்.

இதனால் போட்டி முடிந்தவுடன் தோனி பேட்டால் தீபக்சாகரை விளையாட்டாக அடித்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஜடேஜாவிடமும் தீபக்சாகர் வம்பிழுத்தார். ஜடேஜா பேட்டிங் செய்ய வந்தபோது அவரிடம் சென்று தீபகசாகர் ஸ்லஜிங் செய்திருக்கிறார்.

- Advertisement -

ஜடேஜாவிடம் செல்ல சண்டை:

இதை அடுத்து சாட் ஆடுவது போல் தீபக்சாகரை ஜடேஜா அடித்தார். தொடர்ந்து சி எஸ் கே அணி வீரர்களிடம் தீபக்சாகர் வேண்டும் என்று கிண்டல் செய்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டர்ஸ் தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது களத்திற்கு வந்த தீபக்சாகர் இரண்டு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகள் அடித்தார்.

இதையும் படிங்க: தோனி உன் பந்தை அடிச்சு நொறுக்கணும்னு ரோகித் சொன்னார்.. அதனாலதான் அவர் தலைவர் – ரமன்தீப் சிங் பேட்டி

இதன் மூலம் 15 பந்துகளில் அவர் 28 ரன்கள் எடுக்க மும்பை அணி 130 ரன்கள் சுருண்டு விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 155 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. சிஎஸ்கே அணி தம்மை எடுக்கவில்லை என்ற கோபத்தில் தீபக்சாகர் இவ்வாறு ஆடியிருக்கிறார் என சிஎஸ்கே ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -