ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது கேப்டன் ரோஹித் சர்மா தன்னை எவ்வாறு வழிநடத்தினார் என்பது குறித்து ரமன்தீப் சிங் பேசியிருக்கிறார்.
தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தக்க வைக்கப்பட்டு விளையாடி வரும் ரமன்தீப் சிங் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். அப்போது சிஎஸ்கே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தனக்கு எப்படி நம்பிக்கை கொடுத்தார் என்பது குறித்து கூறியிருக்கிறார்.
கொல்கத்தா எடுத்த வித்தியாசம் முடிவு
நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக வெங்கடேஷ் ஐயரை தக்க வைக்காமல் ஏலத்திற்கு சென்று 23 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. அதே சமயத்தில் அன்கேப்டு வீரர்களாக ஹர்ஷித் ராணா மற்றும் ரமன்தீப் சிங் இருவரையும் வைத்துக்கொண்டது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் டி20 கிரிக்கெட் நல்ல முறையில் வளர்ச்சி அடைவதை கவனித்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அந்த மாநிலத்தை குறிவைத்து சில வீரர்களை அணிக்குள் கொண்டு வந்தது. அதில் மிதவேக பந்துவீச்சு ஆள் ரவுண்டர் ரமன்தீப் சிங் முக்கியமானவராக இருந்தார். ஆனால் அதற்கு அடுத்து அவரை தொடர்ந்து தக்க வைக்க முடியாமல் அந்த அணியால் போக கொல்கத்தா வாங்கியது.
ரோஹித் சர்மா ஒரு தலைவர்
இது குறித்து பேசி இருக்கும் ரமன்தீப் சிங் கூறும் பொழுது ” எனது பேட்டிங் மீது மும்பை இந்தியன்ஸ் நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால் நீங்கள் ஒரு பவுலராக முதல் பந்தை ஐபிஎல் தொடரில் வீசுவது மிகவும் வித்தியாசமானது. இதற்கு முன்பு நீங்கள் அப்படி ஒரு சூழ்நிலையை அனுபவித்து இருக்க மாட்டீர்கள். அந்த நாள் பேட்ஸ்மேனுக்கு நல்ல நாளாக கூட அமையலாம்”
இதையும் படிங்க : எழுதி வச்சுக்கோங்க.. ஏப்ரல் 17ஆம் தேதி இந்த டீம் கூட.. ஹைதராபாத் 300 ரன் அடிக்கும் – டேல் ஸ்டெய்ன் கணிப்பு
“இப்படியான நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீச என் கையில் பந்தை ரோஹித் சர்மா கொடுத்தார். அப்பொழுது அவர் என்னிடம் தோனி உன் பந்துவீச்சை அடித்து நொறுக்கணும் அதுதான் தேவை என்றார். ஏனென்றால் அப்பொழுது சிஎஸ்கே ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த நேரத்தில் அவர்கள் அடிக்க சென்றால் விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்புகள் எங்களுக்கு அதிகரிக்கும். எனவே இப்படி சொல்லி தைரியமாக என் கையில் பந்தை கொடுத்து வீச வைத்தார். இதனால்தான் அவர் ஒரு தலைவராக இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.






