ஐபிஎல் 2025ல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மே 21, புதன்கிழமை மும்பையின் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் 63வது போட்டியில் மோதவுள்ளன. இந்தப் போட்டி பிளேஆஃப் தகுதிக்கு முக்கியமானது, ஏனெனில் இரு அணிகளும் வெற்றி பெற்று தங்கள் நிலையை உறுதிப்படுத்த முனைப்பு காட்டுகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளது. 14 புள்ளிகள்,ரன் ரேட் +1.15 ஆகும். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் பிளேஆஃப் உறுதி செய்யப்படும், மேலும் டெல்லி அணி 15 புள்ளிகளுக்கு மேல் செல்ல முடியாது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5வது இடத்தில் 13 புள்ளிகள், நிகர ரன் ரேட் +0.26 உடன் உள்ளது. மும்பையை வீழ்த்தினால் 15 புள்ளிகள் பெறுவர், மேலும் பஞ்சாப் கிங்ஸை அடுத்த போட்டியில் வென்று 17 புள்ளிகளுடன் பிளேஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.
பிட்ச் ரிப்போர்ட், எங்கு பார்க்கலாம்:
மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ், போட்டி
இடம்: வான்கடே மைதானம், மும்பை
தேதி & நேரம்: மே 21, 2025, மாலை 7:30 மணி
நேரடி ஒளிபரப்பு: ஜியோஸ்டார் நெட்வொர்க் சேனல்கள், ஜியோஹாட்ஸ்டார் (ஆப் & வலைத்தளம்)
வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் சிறிது உதவி கிடைக்கலாம், மேலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பின்னர் பிடி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் பனி காரணமாக அணிகள் பேட்டிங்கை தேர்வு செய்ய விரும்பலாம். 82% மழை வாய்ப்பு இருப்பதால், மழை போட்டியை பாதிக்கலாம்.
நேருக்கு நேர் மோதல்:மொத்த போட்டிகள்: 36
மும்பை இந்தியன்ஸ் வெற்றிகள்: 20
டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றிகள்: 16
அணி வீரர்கள் :
மும்பை இந்தியன்ஸ்: பாரிஸ்டோ, ரோஹித் சர்மா, , சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், அசலங்கா, தீபக் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரீத் பும்ரா. இம்பாக்ட் பிளேயர்: கர்ண் ஷர்மா
இதையும் படிங்க: 1500 பேட்ஸ்மேன் இருக்காங்க.. ப்ளீஸ் ரிஷப் பண்ட் என்ன நடந்தாலும் இதை செய்யாத – அஜய் ஜடேஜா கோரிக்கை
டெல்லி கேப்பிடல்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), சமீர் ரிஸ்வி, கேஎல் ராகுல், அக்ஸர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஆஷுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், டி நடராஜன், முஸ்தாபிசூர் ரஹ்மான். இம்பாக்ட் பிளேயர்: கருண் நாயர்






