நடப்பு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி வரும் ரிஷப் பண்ட் என்ன நடந்தாலும் ஒரு விஷயத்தை எப்பொழுதும் மாற்றிக் கொள்ளக் கூடாது என இந்திய முன்னாள் கேப்டன் அஜய் ஜடேஜா கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிக அதிகபட்ச விலைக்கு லக்னோ அணியால் 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட் வாங்கப்பட்டார். மேலும் 12 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் இன்னும் முழுதாக 150 ரன் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் கீழ் இருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது.
1500 பேட்ஸ்மேன் இருக்கிறார்கள்
இந்த நிலையில் மிக மோசமான நிலையில் இருந்து வரும் ரிஷப் பண்ட் பேட்டிங் தோல்விக்கு என்ன காரணம் என தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், அதே சமயத்தில் என்ன நடந்தாலும் ரிஷப் பண்ட் தன்னுடைய வழக்கமான பேட்டிங் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளக்கூடாது எனவும் அஜய் ஜடேஜா கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அஜய் ஜடேஜா பேசும்பொழுது “ரிஷப் பண்ட் வித்தியாசமான பேட்டிங் அணுகுமுறையை கொண்டவர். அதுவே அவரை தனித்துவமானவராக மாற்றுகிறது. இதன் காரணமாக நான் அவரது பெரிய ரசிகன். ஒரு மோசமான ஐபிஎல் சீசனுக்காக அவர் தன்னுடைய வழக்கமான பேட்டிங்கை மாற்றிக் கொள்ளக் கூடாது. சாதாரண முறையில் வழக்கம் போல் பேட்டிங் செய்ய 1500 பேட்ஸ்மேன்கள் வெளியில் இருக்கிறார்கள். ஆனால் அவர் பேட்டிங் செய்யும் விதம்தான் அவரை ஒரு வெற்றியாளராக மாற்றியது. எனவே அவர் அதை மாற்றிக் கொள்ளக் கூடாது”
இதற்குக் காரணமே தெரியவில்லை
“ரிஷப் பண்ட் அழுத்தத்தால் இப்படி விளையாடுகிறார் என்று சொன்னால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவருக்கு இதுதான் ஆரம்ப சீசன் என்றால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். அவர் ஐபிஎல் தொடரில் நீண்ட காலம் விளையாடி அனுபவம் பெற்றவர். அவருடைய தற்போதைய தோல்வி எனக்கு மர்மமாகவே இருக்கிறது. இதற்கான காரணத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இதைவிட மோசமான ஒரு சீசன் இனி இருக்காது என்று நம்புவோம். அவர் விரைவில் மீண்டு வருவார்”
இதையும் படிங்க : கப் எல்லாரும் மறந்திடுங்க.. மும்பை தூக்கிய 3 மாஸ் ஃபாரின் வீரர்கள்.. டபுள் ஸ்ட்ராங் அசத்தல்
“அவர் ஆரம்பத்தில் சில போட்டிகளில் முன்கூட்டியே பேட்டிங் செய்ய வரவில்லை. சில ஆரம்பக் தோல்விகளால் அவர் மிகவும் அதிகமாக யோசித்து இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதே சமயத்தில் அவர் ஓபனராக வந்திருந்தால் நடந்திருக்கக் கூடிய விஷயங்களை வேறாக இருந்து இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.