ஐபிஎல் 2025: சிஎஸ்கே கழற்றிவிட்ட வங்கதேச புலி.. கடைசி நேரத்தில் ஒப்பந்தம் செய்த டெல்லி அணி

0
63

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்ர்க், தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியதை அடுத்து, வங்கதேச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை 6 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. பல வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் லீக்கின் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்பது குறித்து சந்தேகத்தில் உள்ளனர்.

மேலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான ஃப்ரேசர்-மெக்ர்க், இந்தியாவுக்கு திரும்பும் திட்டத்தை கைவிட்ட முதல் சில வீரர்களில் ஒருவராக உள்ளார். இதன் விளைவாக, 29 வயதான முஸ்தபிசுர் ரஹ்மான், டெல்லி அணியில் இணைந்துள்ளார்.முஸ்தபிசுர் ரஹ்மான் இதுவரை 57 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 61 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் பங்களிப்பு:

வங்கதேசத்திற்காக 106 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 132 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவர் ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 2022 மற்றும் 2023 ஐபிஎல் தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர். டெல்லி தவிர, இந்த வீரர், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற வெற்றிகரமான அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தபோது, முஸ்தபிசுர் 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தார். ஆனால், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கும்,ரஹ்மானுக்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சைக்குரிய முடிவுகளால், தொடரின் நடுவே அவர் நாடு திரும்ப வேண்டியிருந்தது. இதனால், சென்னை அணி, லீக் கட்டத்தின் முக்கியமான கட்டத்தில் தங்கள் வேகப்பந்து வீச்சின் முக்கிய அங்கமான முஸ்தபிசுரை இழந்தது.

- Advertisement -

டெல்லி அணியின் பவுலிங் பலம் பெறும்:

இறுதியில் அந்த சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.இந்த நிலையில்,
முஸ்தபிசுரின் வருகை, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பலத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அனுபவமும், மாறுபட்ட பந்துவீச்சு உத்திகளும், அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும்.

இதையும் படிங்க: சிறந்த டெஸ்ட் வீரர் என்றால் கோலி தான்.. இருவரும் இல்லை என்றாலும், இந்தியாவை சாதாரணமாக நினைக்க கூடாது.. ஆண்டர்சன்

ஐபிஎல் 2025 தொடரில், டெல்லி அணி முஸ்தபிசுரின் திறமையைப் பயன்படுத்தி, வலுவான பந்துவீச்சு அணியாக விளங்குவதற்கு தயாராகி வருகிறது. இந்த மாற்றம், டெல்லி அணியின் பிளே-ஆஃப் வாய்ப்புகளை மேலும் பிரகாசமடையலாம். இதனிடையே டெல்லி, பஞ்சாப் அணிகள் மோதிய போது பாதியில் போட்டி நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது போட்டி மீண்டும் மே 24ஆம் தேதி தொடங்கும்.

- Advertisement -