ஐபிஎல் 2025.. தெரியாமா ரூ.10 கோடி கொடுத்துட்டோமா? பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வர முடியாமல் முழிக்கும் சிஎஸ்கே

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் சனிக்கிழமை முதல் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான இறுதி கட்டப் பணிகளை இரு அணிகளும் மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியா ஸ்லோ ஓவர் ரேட்  தடை காரணமாக அன்று போட்டியில் களமிறங்க மாட்டார் என தெரிகிறது. இதனால் மும்பை இந்தியன்ஸ்  கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் பிளேயிங் லெவன் தொடர்பாக ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

பிளேயிங் லெவன் தேர்வில் குழப்பம்:

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகள் நடைபெறுகிறது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் ஜடேஜா, அஸ்வின், ஆகியோர் உள்ள நிலையில் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட நூர் அகமது இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ரச்சின் ரவீந்திராவும் அணியில் இருப்பதால் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் நூர் அகமதை பிளேயிங் லெவனில் தேர்வு செய்தால் ஷாம் கரண், அல்லது கான்வே என இரண்டு பேரில் யாரேனும் ஒருவர் அணியை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

இம்பேக்ட் வீரராக நூர் அகமது:

ஐபிஎல் விதிப்படி வெறும் 4 வீரர்கள் மட்டும்தான் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த தருணத்தில் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் வெளி நாட்டு பேட்ஸ்மேன்ஆகவும் பதிரானா வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளராகவும் இருப்பார். இந்த தருணத்தில் நான்காவது வெளிநாட்டு வீரராக ஆல் ரவுண்டர் ஷாம்கரன் இருந்தால்தான் அணியின் பேட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சு  பலம் பெறும்.

இதையும் படிங்க: பிசிசிஐ மரியாதை தரும்.. ஆனா நீங்க மீறினா விடாது.. இதுக்கு நானே உதாரணம் புரூக் – மைக்கேல் கிளார்க் பேச்சு

இதனால் நூர் அகமதை இம்பேக்ட் வீரராக பந்து வீசும் போது கொண்டுவர ஒரு யோசனை இருக்கிறது. ஆனால் அந்தப் பணிக்கு சரியான நபராக சிவம் துபே தான் இருப்பார் என்ற ஒரு கருத்தும் முன் வைக்கப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணி யாரை தேர்வு செய்வது யாரை விடுவது என்ற குழப்பத்தில் இருக்கிறது. இதன் காரணமாக நூறு அஹமத் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்துள்ளது. நூர் அகமதை இம்பேக்ட் வீரராக மாற்றி, கான்வேவை பந்துவீசும் போது வெளியே உட்கார வைப்ப்து தான் ஒரே வழி என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
Published by
Tags: CSKIpl 2025