இந்திய கிரிக்கெட் வாரியம் நடக்கும் ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி புரூக் விளையாடுவதற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருப்பது மிகவும் சரியானது என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அதிரடியாக கூடியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஹாரி புரூக் 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தார். அவரை மிடில் ஆர்டரில் விளையாட வைக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிந்தனைக்குழு முடிவு செய்திருந்தது. இப்படியான நிலையில் அவர் இங்கிலாந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என அறிவித்து விட்டார். இது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது.
பிசிசிஐ சொல்லி செய்கிறது
ஹாரி புரூக் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே, ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஒரு வீரர் நியாயமான காரணங்கள் இல்லாமல் தொடரை விட்டு வெளியேறினால், அவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என பிசிசிஐ விதியை கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விதியின் அடிப்படையிலேயே அவர் தண்டிக்கப்பட்டார்.
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறும் பொழுது “ஹாரி புரூக் எதற்காக தடை செய்யப்பட்டு இருக்கிறார்? சில வீரர்கள் ஏலத்தில் தாங்கள் விரும்பும் தொகைக்கு செல்லாவிட்டால் உடனடியாக தொடரில் இருந்து விலகும் முடிவை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கிறோம். நீங்கள் இப்படியான முறையில் முடிவு செய்து தொடரை விட்டு வெளியேறினால் உங்களை நாங்கள் தடை செய்வோம் என பிசிசிஐ ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கிறது”
பிசிசிஐ மதிக்கும் என்று நம்புகிறேன்
“ஹாரி புரூக் தற்போது இதைச் செய்யும் முதல் வீரர் என்று நான் நினைக்கிறேன். ஆனால் பிசிசிஐ ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் சேலத்தில் வாங்கப்பட்டு விட்டால் நீங்கள் அதை மதிக்க வேண்டும். நீங்கள் விரும்பும் தொகை உங்களுக்கு ஏலத்தில் கிடைக்காவிட்டால் நீங்கள் ஐபிஎல் தொடரை விட்டு வெளியேற முடியாது”
இதையும் படிங்க : 26.75 கோடி.. ரிஷப் பண்ட்டை தாண்டி ஸ்ரேயாசை வாங்கியது ஏன்? – பஞ்சாப் கோச் ரிக்கி பாண்டிங் பேட்டி
“ஐபிஎல் தொடரில் எனக்கு முதல் வருடமா அல்லது இரண்டாவது வருடமா என்று தெரியவில்லை, எங்கள் குடும்பத்தில் ஒரு துக்க காரியம் நடந்த பொழுது ஐபிஎல் தொடரை விட்டு விலகி ஆஸ்திரேலியா சென்றேன். குடும்பத்தில் அப்படியான ஒரு நிகழ்வின் போது நான் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஒரு வீரரின் இப்படியான தனிப்பட்ட விஷயங்களை பிசிசிஐ மதிக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால் நீங்கள் இவ்வாறு நடந்து கொள்வது சரியானது கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






