ஐபிஎல் 2025.. சுயநலமா? தியாகமா? ருதுராஜ் செய்தது தவறா? தொடரும் பரிதாபம்

0
28

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக களத்தில் செயல்படாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. 43 வயதான தோனியே கோப்பையுடன் சிஎஸ்கே அணி வழி அனுப்பி வைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் சிஎஸ்கே அணி தற்போது விளையாடி வரும் அழகை பார்த்தால் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணி குறைந்த இலக்கையை சேஸ் செய்யும்போது கூட போராடி தான் வெற்றி பெற்றது. அந்த போட்டியிலும் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அபாரமாக விளையாடியதால் தான் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

- Advertisement -

ருதுராஜ் மீதான விமர்சனம்:

அந்த போட்டியில் ராகுல் திருப்பாதி, சிவம் துபே, தீபக் ஹூடா, ஷாம்கரன் ஆகிய நான்கு வீரர்களும் தடுமாறினர். தற்போது ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் கூட இதே வீரர்கள் தான் மீண்டும் சொதப்பி இருக்கிறார்கள். இந்த தருணத்தில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் தொடக்க வீரராக களமிறங்காமல் ஏன் மூன்றாவது வீரராக விளையாடுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு காரணம் இந்திய அணியில் விராட் கோலி சர்வதேச t20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அந்த இடத்தை குறி வைத்தே ருதுராஜ் காய் நகர்த்துவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காகத்தான் ஐபிஎல் தொடரிலும் ருதுராஜ் மூன்றாவது வீரராக விளையாடுகிறார் என்று புகார் எழுந்துள்ளது.

- Advertisement -

தொடக்க வீரராக செல்வாரா?

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சிஎஸ்கே ரசிகர்கள் ருதுராஜ் அணியின் நன்மைக்காக தன்னுடைய இடத்தை தியாகம் செய்துவிட்டதாகவும், மூன்றாவது வீரராக விளையாடும்போது சிஎஸ்கே அணியின் நடுவரிசை பலமாக மாறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு விஷயம் நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதனை மாற்றுவது என்பது மிகவும் தவறானது ஆகும்.

இதையும் படிங்க: பிளமிங் டீம் செஞ்ச அது ஆச்சரியமா இருக்கு.. தோனி இத செய்யலனா வேஸ்ட் – மைக்கேல் வாகன் நேரடி விமர்சனம்

ருதுராஜ் எப்போது தொடக்க வீரராக களமிறங்கி ரன்கள் சேர்க்கிறாரோ அப்போதுதான் சிஎஸ்கே அணி வெற்றியை பெற்று இருக்கிறது. இதன் காரணமாக ருதுராஜ் மூன்றாவது வீரராக விளையாடுவது தவறாக பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லாததுக்கு முக்கிய காரணமே ருதுராஜ் முதல் இடத்திற்கும் மூன்றாவது இடத்திற்கும் மாறி மாறி சென்று கபடி ஆடியது தான். தற்போது அதே தவறை மீண்டும் ருதுராஜ் செய்வதால் தான் சிஎஸ்கே அணி தோற்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -