204 ரன் வெறும் 16 ஓவர்.. மாஸ் காட்டிய பாகிஸ்தான்.. நவாஸ் அதிரடி சதம்.. நியூசி அணி சொந்த மண்ணில் தோல்வி

0
698
Pakistan

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் இளம் அணி மிக அதிரடியான முறையில் விளையாடி அசத்தல் வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

தற்போது பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்திருந்தது. இன்றைய போட்டியில் தோல்வியடைந்திருந்தால் தொடரை இழக்க வேண்டி இருந்திருக்கும்.

- Advertisement -

பேட்டிங்கில் மிரட்டிய சாப்மேன்

இந்த நிலையில் வாழ்வா சாவா போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு டிம் செப்பர்ட் 9 பந்தில் 19 ரன்கள், கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்கள். மற்றபடி பெரிய பங்களிப்பு வேறு யாரும் செய்யவில்லை.

இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் நான்காவது வீரராக வந்த மார்க் சாப்மேன் அதிரடியில் மிரட்டினார். 44 பந்துகளை எதிர் கொண்ட அவர் 11 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் அதிரடியாக 94 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியின் காரணமாக நியூசிலாந்து அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 24 ரன்கள் சேர்த்தது. பந்துவீச்சில் ஹாரிஸ் ரவுப் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

மிரட்டிய இரண்டாம் விக்கெட் பார்ட்னர்ஷிப்

இதைத்தொடர்ந்து பெரிய டார்கெட்டை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவரில் 74 ரன்கள் அதிரடியாக பாட்னர்ஷிப் அமைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ஹாரிஸ் 20 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : 2025 ஐபிஎல்.. ரியான் பராக் செட் செய்யும் மெகா ரெக்கார்ட்.. ஸ்மித் ரெய்னாவுக்கு அடுத்து அசத்தல்

இதைத்தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு தொடக்க ஆட்டக்காரர் ஹஸன் நவாஸ் மற்றும் கேப்டன் சல்மான் அலி ஆகா இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியை அப்படியே தொடர்ந்தார்கள். இதைத்தொடர்ந்து இருவரும் அரை சதம் அடித்தார்கள். இதில் சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஹ்ஸன் நவாஸ் 44 பந்துகளில் சதம் அடித்து, 45 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 105 ரன்கள் குவித்தார். கேப்டன் சல்மான் அலி ஆகா 31 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

- Advertisement -