ஐபிஎல் 2024: வெற்றி பாதைக்கு திரும்ப அடுத்த போட்டியில் சிஎஸ்கே செய்ய வேண்டிய 2 மாற்றங்கள்.. முழு அலசல்

0
11162

17வது ஐபிஎல் சீசன் தொடர் தற்போது இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் கலந்து கொண்ட மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று டெல்லி அணிக்கு எதிரான ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி வார்னர் மற்றும் ரிஷப் பண்டின் அதிரடியால் 20 ஓவர்களில் 191 ரன்கள் குவித்தது. பின்னர் 192 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும் இறுதிக்கட்டத்தில் இறங்கிய மகேந்திர சிங் தோனி 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்தது சென்னை அணிக்கு ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் அடுத்த போட்டி வருகிற வெள்ளிக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெறுவதால் சிஎஸ்கே அணி போட்டியை மிகுந்த கவனத்துடன் எதிர்கொள்ளும். மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை அணிக்கு எதிராக 227 ரன்கள் குவித்து சாதனை படைத்ததும் இதே மைதானத்தில் தான்.

எனவே பேட்டிங்கில் சன்ரைசர்ஸ் அணி மிகுந்த பலத்துடன் காணப்படுகிறது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா மற்றும் கிளாஸன் ஆகியோர் அந்த அணிக்கு முக்கிய தூண்களாக விளங்குகின்றனர். எனவே சிஎஸ்கே வலுவான அணிக்கு எதிராக களம் இறங்கும் போது இந்த இரண்டு மாற்றங்களை செய்ய வேண்டியது கட்டாயம்.

சிஎஸ்கே செய்ய வேண்டிய 2 மாற்றங்கள்

டேரில் மிட்செல் பதிலாக மொயின் அலி: கடந்த சீசனில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என்று இரண்டு துறைகளில் கலக்கிய மொயின் அலி இந்த சீசனில் களமிறக்கப்படாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு இருக்கிறார். காரணம் சிஎஸ்கே அணி கடந்த ஏலத்தில் 14.50 கோடி ரூபாய் செலவு செய்து டாரி மிச்சலை வாங்கி இருக்கிறது. பேட்டிங்கில் அதிரடியாக விளையாடக்கூடிய இவர் பந்துவீச்சிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருவதால் இவர் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக இருக்கக் கூடும் என்று வாங்கினர். இருப்பினும் சென்னை அணி ஆப் ஸ்பின்னர் இல்லாமல் கடந்த மூன்று போட்டியில் விளையாடியது. இதனால் ஆஃப் பின்னரை கருத்தில் கொண்டு மொயின் அலியை இவருக்கு பதிலாக உள்ளே கொண்டு வரலாம். முஸ்தஃபிகுர் ரகுமான் ஏற்கனவே விளையாடி வருவதால், பதிரானாவை களம் இறக்க, தீக்ஷனாவை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க: தோனி பேட்டிங்கில் 8வது வர.. பிளெமிங் எடுத்த அந்த முடிவு தான் காரணம்.. சிஎஸ்கே மைக் ஹஸ்ஸி பேட்டி

டாப் ஆர்டரில் தோனி: இரண்டாவது ஆக மகேந்திர சிங் தோனி டாப் ஆர்டரில் களமிறங்கி பேட்டிங் செய்வது முக்கியம். ஏனெனில் கடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்து மிகச் சிறந்த பேட்டிங் ஃபார்மில் தற்பொழுது இருக்கிறார். இதனால் ரிஸ்வி மற்றும் ஜடேஜா இவர்களுக்கு முன்னதாக டாப் ஆர்டரில் களம் இறங்குவது சென்னை அணிக்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு மாற்றங்களை செய்யும் பட்சத்தில் சென்னை அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வலுவாக களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.