வீடியோ: 5 பந்தில் 3 சிக்ஸர்.. டெல்லிக்கு தண்ணி காட்டிய அஸ்வின்.. சங்கக்கராவின் மைண்ட் கேம்

0
157
Ashwin

2024 17வது ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இது முக்கியமான போட்டியாக அமைகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தேர்ந்தெடுக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் ஜோஸ் பட்லர் கேப்டன் சஞ்சு சாம்சன் என மூன்று பேட்ஸ்மேன்களும் 36 ரன்களுக்கு வெளியேறி விட்டார்கள். இதன் காரணமாக அந்த அணிக்கு பெரிய இக்கட்டான நிலை உருவானது.

- Advertisement -

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளர் சங்கக்கரா அதிரடியாக ரவிச்சந்திரன் அஸ்வினை ஐந்தாவது வீரராக உள்ளே அனுப்பினார். ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து விளையாடினார், இம்பேக்ட் பிளேயராக ஒரு பேட்ஸ்மேன் உள்ளே வாங்காமல், பந்து வீசும் பொழுது ஒரு பந்துவீச்சாளரை கொண்டு வரலாம் என்பதுதான் அவரது திட்டம்.

மேலும் எல்லோரும் ரியான் பராக் அடித்து விளையாடுவார் ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட்டைக் காப்பாற்றி சிங்கிள் தட்டி விளையாடுவார் என்று நினைக்கும் பொழுது, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு குமார் சங்கக்கரா வேறு மாதிரியான ஒரு திட்டத்தைக் கொடுத்து அனுப்பி இருந்தார். அவரது இந்த வியூகம் உடனடியாக பலன் கொடுத்தது.

உள்ளே வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் யாரும் எதிர்பார்க்காத வகையில் குல்தீப் யாதவ் ஓவரில் நேராக தூக்கி லாங் ஆன் திசையில் சிக்ஸர் அடித்தார். ஒரு பந்து விட்டு அடுத்த பந்தில் அதிவேக அன்றிச் நோர்க்கியா பந்தில் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸர் அடித்தார். மீண்டும் அவரது ஓவரில் அங்கேயே ஒரு பந்து விட்டு ஒரு சிக்சர் அடித்தார். அந்தக் குறிப்பிட்ட ஐந்து பந்துகளில் மட்டும் மூன்று சிக்ஸர்கள் மற்றும் இரண்டு சிங்கிள் ரன்கள் என 20 ரன்கள் அடித்தார். அங்கிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புது வேகம் கிடைத்தது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் என்சிஏ-ல சொன்னது தப்பா போகல.. இவன் மாறிய பையன் – சூரியகுமார் ரியான் பராக் பற்றி கருத்து

ரவிச்சந்திரன் அஸ்வின் வேகமாக விளையாடியதால் ரன் அழுத்தம் ரியான் பராக் மேல் விழவில்லை. அவர் பொறுமையாக ஆட்டத்தை எடுத்துச் சென்று கடைசியில் அடித்து நொறுக்கி விட்டார். ரவிச்சந்திரன் அஸ்வின் 19 பந்தில் 29 ரன்கள் எடுக்க, ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.