நான் என்சிஏ-ல சொன்னது தப்பா போகல.. இவன் மாறிய பையன் – சூரியகுமார் ரியான் பராக் பற்றி கருத்து

0
140
Surya

இன்றைய ஐபிஎல் போட்டியில் ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக் கொண்டு வருகின்றன. இன்றைய போட்டியில் முதலில் அரசியல் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அந்த அணியில் அன்றிச் நோர்க்கியா மற்றும் முகேஷ் குமார் இருவரும் இடம் பெற்று இருந்தார்கள்.

இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் 5, ஜோஸ்பட்லர் 11, சஞ்சு சாம்சன் 15 என அடுத்தடுத்து வெளியேற 36 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து பவர் பிளேவும் முடிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. இந்த நிலையில் முன்கூட்டியே அனுப்பப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ஆனாலும் நான்காவது வீரராக தொடர்ந்து அனுப்பப்படுகிற இளம் வீரர் ரியான் பராக் இன்றைய போட்டியில் தன்னுடைய பேட்டிங் முதிர்ச்சியை வெளிப்படுத்தி அதிரடியில் கலக்கினார். சூழ்நிலையை புரிந்து அதற்கு ஏற்ற வகையில் விளையாடிய அவர் 34 பந்துகளில் தன்னுடைய மூன்றாவது ஐபிஎல் அரை சதத்தை நிறைவு செய்தார்.

இதற்குப் பிறகு தொடர்ந்து விளையாடிய அவர் 45 பந்துகளில் அதிரடியாக 7 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் உடன் ஆட்டம் இழக்காமல் 84 ரன்கள் குவித்தார். முதல் 26 பந்தில் 26 ரன்கள் எடுத்த ரியான் பராக், கடைசியாக தான் சந்தித்த 19 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். ஆட்டத்தின் இறுதி ஓவரை அன்றிச் நோர்க்கியா வீச, அந்த ஓவரில் மட்டுமே 25 ரன்கள் ரியான் பராக் நொறுக்கித் தள்ளினார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் ரியான் பராக் அதிரடியில் குறிப்பாக சிக்ஸர்கள் அடிப்பதில் மிரட்டி வருகிறார். மேலும் வெள்ளைப்பந்து சிவப்புப்பந்து என இரண்டிலும் சதங்கள் அடித்து வருகிறார். இதன் காரணமாகவே அவருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பேட்டிங் வரிசையில் நான்காவது இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ: 4,4,6,4,6.. வெளுத்துக்கட்டிய ரியான் பராக்.. கடைசி 19 பந்தில் 58 ரன்.. தெறி பேட்டிங்

ரியான் பராக் பேட்டிங் பற்றி ட்வீட் செய்துள்ள சூரியகுமார் யாதவ் “சில வாரங்களுக்கு முன்பு என்சிஏ-வில் ஒரு பையனை சந்தித்தேன். அவருக்கு கொஞ்சம் நிக்கில் இருந்தது. அவர் அங்கு வந்ததிலிருந்து குணமடைவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். மேலும் தனது திறமைகளில் ஒழுக்கத்துடன் வேலை செய்தார். நான் அப்போது அங்கு இருந்த ஒருவரிடம் இந்தப் பையன் தற்பொழுது மாறி இருக்கும் பையன் என்றுகூறினேன். அது தற்போது தவறில்லை என்று தெரிகிறது. அந்தப் பையன்தான் ரியான் பராக் 2.0” என்று கூறியிருக்கிறார்.