தோனியையும் மிஞ்சி.. சஞ்சு சாம்சன் செய்த மாஸ் ரன் அவுட்.. நம்பவே முடியாமல் சென்ற லிவிங்ஸ்டன்

0
241
Sanju

இன்று 17வது ஐபிஎல் சீசனில் 27வது போட்டியில், பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் அபாரமான ரன் அவுட் ஒன்றை செய்து அசத்தியிருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஷிகர் தவான் காயத்தின் காரணமாக இடம்பெறாததால் கேப்டனாக சாம் கரன் செயல்படுகிறார். பஞ்சாப் அணிக்கு துவக்க வீரராக வந்த அதர்வா டைடே 12 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் பவர் பிளேவில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த போதிலும் அந்த அணியால் 40 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 10 (14), சாம் கரன் 6 (10), ஷஷான்க் சிங் 9 (9), ஜிதேஷ் சர்மா 29 (24) ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

கடைசிக் கட்டத்தில் அதிரடி வீரர்கள் லியம் லிவிங்ஸ்டன் மற்றும் அசுடோஸ் சர்மா ஜோடி சேர ரன்கள் வருவது போல இருந்தது. இந்த நிலையில் அசுடோஸ் சர்மா அடித்த பந்துக்கு லிவிங்ஸ்டன் இரண்டு ரன்கள் ஓட முயற்சி செய்ய, அதற்கு அவர் மறுத்து விட்டார். இந்த நிலையில் எளிதாக கிரீசுக்குள் திரும்பி விடலாம் என்று லிவிங்ஸ்டன் நினைத்து திரும்ப, ஸ்டெம்புக்கு தூரமாக பந்தை பிடித்த சஞ்சு சாம்சன், அப்படியே பின்புறத்தில் இருந்து ஸ்டெம்பை பார்க்காமல் பந்தை அடிக்க, லிவிங்ஸ்டன் பரிதாபமாக ரன் அவுட் ஆனார். இந்த ரன் அவுட் தோனியையும் மிஞ்சும் வகையில் இருந்தது.

இறுதியில் லிவிங்ஸ்டன் 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசிக் கட்டத்தில் இம்பேக்ட் பிளேயர் ஆக வந்த அசுடோஸ் ஷர்மா 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். அவர் கடந்த மூன்று போட்டிகளாக இம்பேக்ட் பிளேயராக வந்து 30 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ.. 6,6,6,6,6,6.. ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்.. நேபாள் வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தரப்பில் ஆவேஸ் கான் மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.