IPL 2024.. பழைய மாதிரி இல்ல.. வேற மாதிரி கம்பேக் கொடுக்கும் ரிஷப் பண்ட்.. நடந்தது என்ன.?

0
3387

2024 ஆம் வருட ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் வருகின்ற 19ஆம் தேதி துபாயில் வைத்து நடைபெற இருக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள இருக்கும் இந்த ஏலத்தில் பல சர்வதேச வீரர்களும் உள்நாட்டு வீரர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடந்த ஐபிஎல் தொடரில் ஒன்பதாவது இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கடந்த வருடம் உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கார் விபத்தை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருந்தார்.

- Advertisement -

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு காயங்களில் இருந்து முழுவதுமாக குணமடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் எப்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட வருவார்.? என்று கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அந்தத் தகவலின்படி இந்திய அணியின் இளம் அதிரடி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நடைபெற இருக்கின்ற 2024 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் மீண்டும் களம் இறங்க இருக்கிறார் என டெல்லி கேப்பிட்டல் தனி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக அந்த அணியின் மேலாண்மை நிர்வாகி ஒருவர் ரேவ் ஸ்போர்ட்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக பேட்டியளித்திருக்கும் அவர் ” ரிஷப் பண்ட் தன்னுடைய முழு உடல் தகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறார். மீண்டும் பழையபடி கிரிக்கெட் விளையாட வெகு விரைவில் களமிறங்குவார். மிகப்பெரிய காயத்திலிருந்து அவர் மீண்டு வந்திருப்பதால் அவருக்கு தேவையான ஓய்வு வழங்க வேண்டியது கட்டாயம். வருகின்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட இருக்கிறார். எனினும் தற்போதைய சூழ்நிலையில் விக்கெட் கீப்பிங் பணியாற்ற மாட்டார்” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் வருகின்ற ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் இம்பேக்ட் வீரராக களம் இறக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் அவர் பேட்டிங் மட்டும் செய்தால் போதும். விக்கெட் கீப்பிங் பணி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் பில்டிங்கின் போதும் அவருக்கு ஓய்வு வழங்கப்படும். இதனால் வருகின்ற ஐபிஎல் தொடரில் பிஷப் பண்ட் இம்பேக்ட் வீரராக களம் இறக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாக இருக்கிறது. ரிஷப் பணத்தின் வருகை கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகப்பெரிய உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ரிஷப் பண்ட் தலைமையில் டெல்லி தொடர்ச்சியாக இரண்டு முறை ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் ஒரு முறை இறுதிப்போட்டி வரை சென்று தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 98 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கும் ரிஷப் பண்ட் 2838 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் 15 அரை சதங்களும் 1 சதமும் அடங்கும்.