வீடியோ: 2.27 மீட்டர்.. 42 வயது.. காற்றில் பறந்து பிடித்த தோனி.. 3 வருஷம் ஐபிஎல் ஆடுவார் போல

0
509
Dhoni

நடப்பு 17வது ஐபிஎல் சீசன், சிஎஸ்கே அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் மிகச் சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 18.4 ஓவரில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த வெற்றியுடன் சிஎஸ்கே புதிய கேப்டன் ருதுராஜ் பயணம் ஆரம்பித்தது.

இந்த நிலையில் இன்று மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், புதிய கேப்டன் சுப்மன் கில் உடன் வரும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டி ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே ரசிகர்களுக்கு என்னென்ன தேவையோ, அவர்கள் என்னவெல்லாம் எதிர்பார்த்தார்களோ மொத்தமும் கிடைத்திருக்கும் போட்டியாக மாறி இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரச்சின் ரவீந்தரா 20 பந்தில் 46 ரன்கள், கேப்டன் ருதுராஜ் 36 பந்தில் 46 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணிக்கு வலிமையான துவக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தார்கள். இதன் காரணமாக வலிமையான பேட்டிங் லைன் அப் வைத்திருக்கும் சிஎஸ்கே அணி இதை பயன்படுத்தி ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்தது.

மேற்கொண்டு சிவம் துபே 22 பந்தில் 51 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற இளம் வீரர் சமீர் ரிஸ்வி ஆறு பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்து மிரட்டியது. இந்த முறையும் தோனி பேட்டிங் செய்ய வர முடியவில்லை.

இதற்கு அடுத்த பேட்டிங் வந்த குஜராத் அணிக்கு கில் 8, விருதிமான் சகா 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இந்த நிலையில் ஆச்சரியப்படத்தக்க வகையில் டேரில் மிட்சலை பந்துவீச்சுக்கு கொண்டு வந்தார்கள். அந்த ஓவரை எதிர்கொண்ட விஜய் சங்கர் அவுட் சைடு எட்ஜ் எடுக்க, தோனியிடமிருந்து பந்து வலது புறம் சீறி சென்றது. இதற்கு உடனே அற்புதமாக ரியாக்ட் செய்த தோனி பந்தை காற்றில் பறந்து பிடித்து அசத்தினார். அந்த நொடி ஒட்டுமொத்தமாக சென்னை சேப்பாக்கம் மைதானம் குலுங்கி அடங்கியது.

- Advertisement -

இதையும் படிங்க : 127 டெசிபல்.. எடுத்ததும் சிவம் துபே அடுத்தடுத்த 2 சிக்ஸர்.. அதிர்ந்த சேப்பாக்கம்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஆரவாரம்

மகேந்திர சிங் தோனி 42 வயதான போதிலும், 2.27 மீட்டர் பாய்ந்து பந்தை பிடித்தார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பந்து எட்ஜ் எடுத்த நொடியில், 42 வயதில் அவரது உடல் உடனடியாக ரியாக்ட் செய்தது. இந்த வயதில் எப்பொழுதுமே உடல் நடக்கும் விஷயத்திற்கு கொஞ்சம் தாமதமாக ரியாக்ட் செய்யும். ஆனால் தோனிக்கு ரியாக்ட் செய்யும் வேகம் இந்த வயதிலும் குறையவே இல்லை. இதனால் இன்னும் மூன்று வருடங்கள் அவர் இதே போல விளையாடுவாரா? என்கின்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.