வீடியோ: 4,4,6,4,6.. வெளுத்துக்கட்டிய ரியான் பராக்.. கடைசி 19 பந்தில் 58 ரன்.. தெறி பேட்டிங்

0
112
Parag

இன்று ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்ற வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்க டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வி அடைந்திருந்தது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிசப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இன்று ஆரம்பத்தில் ஜெய்ப்பூர் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. இதன் காரணமாக அடுத்தடுத்து ஜெயஸ்வால் 5, ஜோஸ் பட்லர் 11, சஞ்சு சாம்சன் 15 ரன்கள் என வரிசையாக வெளியேறினார்கள்.

- Advertisement -

தங்களிடம் பவுலிங் ஆல்ரவுண்டர் இல்லாததால் மூன்று விக்கெட் விழுந்ததும் ரவிச்சந்திரன் அஸ்வினை உள்ளே அனுப்பினார்கள். அவர் அதிரடியாக மூன்று சிக்ஸர்களுடன் 19 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த துருவ் ஜுரல் 12 பந்தில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஆனால் இன்னொரு முனையில் நின்ற இளம் வீரர் ரியான் பராக் தன்னுடைய முதிர்ச்சியான பேட்டிங் மூலம் பிரமிக்க வைத்தார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 34 பந்தில் அரை சதம் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தை நகர்த்தி தேவையான இடங்களில் அதிரடியாக விளையாடினார். இம்பேக்ட் பிளேயரை உள்ளே எடுக்க தேவையில்லாத அளவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதி ஓவரை நெருங்கியது.

இந்த நிலையில் இருபதாவது ஓவரை அதிவேக பந்துவீச்சாளர் அன்றிச் நோர்க்கியா வீசினார். அந்த ஓவரில் ரியான் பராக் 4,4,6,4,6,1 என விளாசித்தள்ளி 25 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் 150 ரன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுக்குமா? என்கின்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ரியான் பராக்கின் அதிரடியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியை விட ரகானேதான் ஃபிட்டா இருக்கார்.. இதான்பா காரணம் – சேவாக் பேட்டி

இறுதி வரை ஆட்டம் இழக்காத ரியான் பராக் 45 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்தார். முதல் 26 பந்தில் 26 ரன்கள் எடுத்த ரியான் பராக், கடைசி 19 பந்தில் மட்டும் 58 ரன்கள் குவித்திருக்கிறார். கடைசி சில ஓவர்களுக்கு உள்ளே வந்த சிம்ரன் ஹெட்மையர் 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியின் தரப்பில் பந்து வீசிய ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.