இதுவரை எங்கப்பா ஒளிஞ்சிருந்த.. மயங்க் யாதவுக்கு அவரின் ஹீரோ டேல் ஸ்டெய்ன் போட்ட பதிவு.. நெகிழ்ச்சி சம்பவம்

0
2580

இன்று அனைவராலும் பேசப்படுவார் லக்னோ சூப்பர் ஜென்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ். நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் தனது அதிவேக பந்து வீச்சின் மூலமாக மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி லக்னோ அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

அவர் விக்கெட்டுகள் வீழ்த்தியதை விட அவரது வேகம் கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டது. ஆம் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறார் என்றால் அது யாரால் தான் ஈர்க்கப்படாது. டெல்லியைச் சேர்ந்த 21 வயதான வேகப்பந்துவீச்சாளரான இவர் கடந்த 2022ஆம் ஆண்டு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். ஆனால் அந்த சீசனில் காயம் காரணமாக இவரால் பங்கு பெற முடியாமல் போனது.

- Advertisement -

அதன் பிறகு தனது கடும் உழைப்பினால் மீண்டு வந்த அவர் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதன் முறையாக களமிறங்கினார். லக்னோ அணி நிர்ணயத்த 200 ரன்கள் இலக்கை பஞ்சாப் அணி விரட்டிக் கொண்டிருந்த போது பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவின் விக்கட்டை வீழ்த்தி ஆட்டத்திற்கு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அதன் பிறகு பஞ்சாப் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான ஜித்தேஷ் ஷர்மா மற்றும் பிரப் சிம்ரன் ஆகியோரது விக்கெட்டுகளையும் வீழ்த்தி லக்னோ உனக்கு ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால் லக்னோனி போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின்னர் பேசிய மயங்க் யாதவ் கிரிக்கெட்டில் தன் அடையாளமாக கருதப்படுவது தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினைக் கூறியிருக்கிறார்.

மயங்க் யாதவ் குறித்து டேல் ஸ்டெய்ன்

ஒரு வேகப்பந்து வீச்சாளராக நான் அவரை மட்டுமே பார்க்கிறேன். அவர்தான் என் முன்மாதிரி என்று கூறி இருக்கிறார். மேலும் குறைந்த ரன் விகிதத்தில் அதிவேகமாக பந்து வீசுவதே எனது முக்கிய நோக்கம் என்றும் கூறியிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க அவர் ஹீரோவாக கருதிய டேல் ஸ்டைன் தனது ட்விட்டர் பக்கத்தில் “155.8 கிலோமீட்டர் வேகம். மயங்க் யாதவ் எங்கே ஒளிந்திருந்தாய்”. என்று பதிவிட்டு இருக்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் இதனை வைரல் ஆக்கி வருகின்றனர்.

- Advertisement -

மேலும் பஞ்சாப் அணிக்கு எதிரான இவர் வீழ்த்திய மூன்று விக்கெட்டுகள் இவருக்கு ஆட்டநாயகன் விருதையும் வென்று தந்தது. மேலும் தனது காயம் குறித்து கூறிய மயங்க் யாதவ் விஜய் ஹசாரே டிராபிக்கு பிறகு “எனக்கு பக்கவாட்டு வலி இருந்தது. காயங்கள் என்பது வேகப்பந்து வீச்சாளருக்கு ஒரு பகுதி. காயங்கள் உங்கள் நண்பர்கள் போல வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024: இந்த புது ரூல் பவுலர்களுக்கு கொண்டாட்டம்தான்.. பேட்ஸ்மேன்கள் பாவம் – டேல் ஸ்டெய்ன் பேட்டி

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எனக்கு இரண்டு முதல் மூன்று பெரிய காயங்கள் ஏற்பட்டது. இது எனக்கு வீழ்ச்சியாக கடந்த ஐபிஎல் தொடரை தவறவிட்டேன். காயத்திலிருந்து மீண்டு வந்து பயிற்சி பெறுவதே எனது முக்கிய நோக்கமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.