MI vs CSK: வியக்க வைக்கும் வான்கடே புள்ளி விவரங்கள்.. சிஎஸ்கே 16 வருட வரலாற்றை மாற்றுமா? – முழு தகவல்கள்

0
706
CSK

ஐபிஎல் தொடரில் பொதுவாக சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்குதான் சந்தை மதிப்பும், ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்கும். இந்த நிலையில் நாளை மறுநாள் ஞாயிறு மும்பை வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் மோத இருக்கின்றன. இந்த இரு அணிகளுக்கு இடையேயான புள்ளி விபரங்களை பார்க்கலாம்.

சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஒட்டுமொத்தமாக 38 முறை நேருக்கு நேராக மோதி இருக்கின்றன. இதில் மும்பை இந்தியன்ஸ் 21 முறை வெற்றி பெற்று இருக்கிறது. சிஎஸ்கே அணி 17 முறை வெற்றி பெற்று இருக்கிறது. ஒட்டுமொத்தமாக மும்பை இந்தியன்ஸ் கையே இதில் ஓங்கி இருக்கிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் 11 முறை மோதியிருக்கின்றன. இதில் சிஎஸ்கே அணி நான்கு முறையும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு முறையும் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே அதிகபட்ச ஸ்கோராக 187/6, குறைந்தபட்ச ஸ்கோராக 135/9ரன்கள் பதிவாகி இருக்கிறது. மேலும் அதிகபட்சமாக 174 ரன்கள் சேஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மொத்த மோதல்களில் சுரேஷ் ரெய்னா 30 போட்டிகளில் 710 ரன்கள், ரோகித் சர்மா 27 போட்டிகளில் 700 ரன்கள், தோனி 34 போட்டிகளில் 653 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். பந்துவீச்சில் பிராவோ 26 போட்டிகளில் 36 விக்கெட்டுகள், லசித் மலிங்கா 21 போட்டிகளில் 31 விக்கெட், ஹர்பஜன் சிங் 26 போட்டிகளில் 26 விக்கெட் எடுத்திருக்கிறார்கள்.

இதுவரை இரண்டு அணிகளும் மோதி கொண்டதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பில் இருந்து மட்டுமே ஒரே ஒரு சதம் சிஎஸ்கே அணிக்கு எதிராக அடிக்கப்பட்டிருக்கிறது. 2008 ஆம் ஆண்டு ஜெயசூர்யா ஆட்டம் இழக்காமல் 48 பந்தில் 114 ரன்கள் குவித்திருந்தார். 16 வருட ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு சிஎஸ்கே பேட்ஸ்மேனும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடிக்கவில்லை. இந்த முறை இந்த வரலாற்றை இளம் சிஎஸ்கே அணி மாற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க: தோனி 2011ல சொன்ன அதே வார்த்தை.. 2023லயும் அதையேதான் சொன்னார்.. அவர் அதான் கிரேட் – ரகானே பேட்டி

மேலும் வான்கடே மைதானத்தில்இரவில் பனிப்பொழிவு அதிகம் வரும் என்கின்ற காரணத்தினால், வெற்றி தோல்வியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே டாஸ் வென்றால் முதலில்பந்து வீச வேண்டியது அவசியம். அடுத்து ஆடுகளம் வேகம் மற்றும் பவுன்ஸ் கொண்டதாக இருந்தாலும், பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே யாராக இருந்தாலும் பேட்டிங் யூனிட்டை பயன்படுத்தி பெரிய அளவில் ரன்கள் குவிப்பது முக்கியம்!