ஐபிஎல் 2024 ஏலம்.. வாங்கப்படாத வீரர்களை கொண்ட வலிமையான பிளேயிங் லெவன்.. 11வது டீம்!

0
2307
Ipl2024

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் டி20 தொடருக்கான மினி ஏலம் பலரை ஒரே வருடத்தில் பல கோடிகளுக்கு அதிபதியாகி இருக்கிறது. சிலருக்கு தங்கள் வாழ்க்கைக்கு அவசியமான சில லட்சங்களை கொடுத்திருக்கிறது.

அதே சமயத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான தகுதிகள் இருந்தும், பலரை ஐபிஎல் அணிகள் புறக்கணித்திருக்கின்றன. இதனால் பல வீரர்கள் சில லட்சங்களில் இருந்து சில கோடிகள் வரை இழந்து இருக்கிறார்கள்.

- Advertisement -

மொத்தமாக நடந்து முடிந்த ஏலத்தில் ஸ்டார்க் 24.75 கோடி, கம்மின்ஸ் 20.50 கோடி, டேரில் மிட்சல் 14 கோடி எனப் பெரிய தொகைக்குப் போய் இருக்கிறார்கள். அதே சமயத்தில் இந்திய உள்நாட்டு வீரர்களில் சமீர் ரிஸ்வி 8.40 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் வாங்கப்படாத பிரபலமான வீரர்களை வைத்துப் பார்த்தாலே ஒரு வலிமையான பிளேயிங் லெவன் கிடைக்கிறது. அந்த 11 வீரர்கள் யார் என்று இந்தச் சிறிய கட்டுரை தொகுப்பில் பார்ப்போம்.

பில் சால்ட் : இங்கிலாந்து விக்கெட் கீப்பிங் துவக்க பேட்ஸ்மேன். சமீபத்தில் ஐபிஎல் ஏலம் நடக்கும்பொழுது வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிராக சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

மனன் வோரா : இந்திய உள்நாட்டுத் தொடர்களில் நல்ல அனுபவம் கொண்ட துவக்க வீரர்.

ஸ்டீவ் ஸ்மித் : ஆஸ்திரேலியாவுக்கு மூன்றாம் இடத்தில் சர்வதேச அளவில் விளையாடக்கூடிய நட்சத்திர பேட்ஸ்மேன். இவரை வருகின்ற டி20 உலக கோப்பைகள் துவக்க வீரராக களம் இறக்க ஆஸ்திரேலியா யோசிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோஸ் இங்கிலீஷ் : ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பிங் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவில் சதம் அடித்திருக்கிறார்.

சர்பராஸ் கான் : உள்நாட்டு மற்றும் ஐபிஎல் அனுபவம் கொண்ட இந்திய வீரர். பொதுவாக இவர் மிடில் ஆர்டரில் விளையாடிய அனுபவம் கொண்டிருக்கிறார்.

மிட்சல் பிரேஸ்வெல் : ஆப் ஸ்பின் வீசக்கூடிய பேட்டிங் நியூசிலாந்து ஆல் ரவுண்டர். கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடினார்.

ஜேம்ஸ் நீசம் : மீடியம் ஃபாஸ்ட் நியூசிலாந்து பேட்டிங் ஆல் ரவுண்டர். மிக முக்கியமாக ஃபினிஷர்.

ஓடியன் ஸ்மித் : வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர். கடந்த இரண்டு தொடர்களாக ஐபிஎல்#ல் வாய்ப்பு கிடைத்து தற்பொழுது கழட்டிவிடப்பட்டிருக்கிறார்.

ஜோஸ் ஹேசில்வுட் : எந்த அணியும் இந்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளரை இவரை வாங்க விரும்பும். சொந்த காரணங்களால் பாதி ஐபிஎல் தொடரில்தான் கிடைப்பார் என்பதால், ஒரு வருடம் விட்டு மெகா ஏலத்தில் வாங்குவதற்காக தவிர்க்கப்பட்டு இருக்கிறார்.

தப்ரைஸ் சம்சி : தென் ஆப்பிரிக்க சைனா மேன் பவுலர். இந்திய ஆடுகளங்களில் இவரால் போட்டியில் தாக்கத்தை உருவாக்க முடியும்.

ஆடம் மில்னே : மணிக்கு சராசரியாக 145 கிலோ மீட்டர் வீசக்கூடிய நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர். மெகா ஏலத்தில் சென்னை அணி இவரை வாங்க, காயத்தின் காரணமாக வெளியேறியவர், இதுவரை ஐபிஎல் தொடருக்குள் வரவில்லை!