ஐபிஎல் 2024 ஏலம்.. சிஎஸ்கே டார்கெட் பண்ண வாய்ப்புள்ள 4 தமிழக கிரிக்கெட் வீரர்கள்.!

0
895
CSK

2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் வைத்து வருகின்ற 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கியமான வீரர்களை விடுவித்து இருப்பதால் சென்னை அணியின் கைவசம் புதிய வீரர்களை வாங்குவதற்கு 31.4 கோடி ரூபாய் இருக்கிறது.

நீண்ட காலமாக சென்னை அணிக்கு விளையாடி வந்த அம்பத்தி ராயுடு தற்போது ஓய்வு பெற்றிருப்பதால் மிடில் ஆர்டரில் அவரது இடத்தில் விளையாட இந்திய வீரர் ஒருவரை எடுக்க சிஎஸ்கே முனைப்பு காட்டும். மேலும் நீண்ட காலமாக சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள் இடம் பெறவில்லை. இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் விதமாக இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர்களை சிஎஸ்கே குறிவைக்க வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

தமிழக வீரர்கள் முரளி விஜய் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளின் தொடக்க காலம் முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்தனர். அந்த இரு வீரர்களும் சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் குறிப்பிடத்தக்க தமிழக வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம் பெறவில்லை. ஜெகதீசன் போன்ற வீரர்கள் சென்னை அணியில் சில காலம் இடம் பெற்றிருந்தாலும் ஆடும் லெவனில் வாய்ப்பு எப்போதாவது தான் கிடைத்தது. இந்த வருடம் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்க வாய்ப்பிருக்கும் நான்கு தமிழக வீரர்களை வீரர்களை பற்றி பார்ப்போம்.

ஷாருக்கான்: இந்தப் பட்டியலில் முதலிடம் பெறுபவர் ஷாருக்கான். அதிரடி ஆல் ரவுண்டரான இவர் தமிழக அணிக்காக பினிஷர் ரோலில் விளையாடி வரும் இவர் ஐபிஎல் தொடர்களில் பஞ்சாபின் சாணிக்காகவும் பினிஷர் ஆக விளையாடினார். இந்த வருட ஏலத்திற்கு முன்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை விடுவித்துள்ளது. டேட்டிங்கில் மட்டுமல்லாது தற்போது பந்து வீட்டிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். அம்பத்தி ராயுடு இடத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாட இவர் சரியான தேர்வாக இருப்பார். சிஎஸ்கே அணி நிச்சயமாக ஏலத்தில் இவரை டார்கெட் செய்யும் பதில் சந்தேகம் இல்லை.

முருகன் அஸ்வின்: தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரரான முருகன் அஸ்வின் ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். கடந்த வருட ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இவர் இந்த வருடம் விடுவிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் தீக்க்ஷனா மிச்செல் சான்ட்னர் மற்றும் மொயின் அலி போன்ற ஆப் ஸ்பின்னர்கள் இருந்தாலும் அனுபவம் வாய்ந்த ஒரு லெக் ஸ்பின்னர் இல்லாதது பெரிய குறையாகவே இருந்தது. தற்போது ஏலத்தில் முருகன் அஸ்வினை எடுப்பதன் மூலம் சென்னை அணிக்கு ஒரு லெக் ஸ்பின்னரும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு வீரரும் கிடைப்பார்.

- Advertisement -

ஜி.அஜீதேஷ்: தமிழ்நாட்டைச் சார்ந்த இளம் விக்கெட் கீப்பர் அனைவர் டாப் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய அதிரடியான வீரர். எம்எஸ். தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் பட்சத்தில் சிஎஸ்கே அணியின் வருங்கால விக்கெட் கீப்பராக இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. மேலும் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருப்பதால் சிஎஸ்கே அணி ஏலத்தில் இவரை எடுக்க முயற்சி செய்யும்.

எம்.முஹம்மத்: தமிழ்நாட்டைச் சார்ந்த பவுலிங் ஆல்ரவுண்டரான முஹம்மத் நீண்டகாலமாக தமிழக அணிக்கு செய்யது அலி முஸ்தாக் டிராபி மற்றும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். மிதவேக பந்துவீச்சாளரான இவர் லோயர் மிடில் ஆர்டரில் அதிரடியாகவும் விளையாடக் கூடியவர். சமீபத்தில் சிஎஸ்கே அணி இவரது பந்துவீச்சை பரிசோதனை செய்வதற்கு அழைத்திருந்தது. இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இவரை சிஎஸ்கே எடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.