3 இந்திய வீரர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க போகும் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல்!

0
190

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் நாளை துவங்க இருக்கிறது. இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்களும் உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஐபிஎல் போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பங்குபெறும் இந்த போட்டி தொடர் கிரிக்கெட்டின் திருவிழா என்று கூறலாம். ஐபிஎல் போன்ற மிகப்பெரிய ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் தொடரில் இது வீரர்களும் தங்களது முதல் தர ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புவார்கள்.

ஒரு சில வீரர்களுக்கு இந்த ஐபிஎல் தொடரானது அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவர்கள் இந்த போட்டி தொடரில் நன்றாக விளையாடினால் அது அவர்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக அமையும். ஒருவேளை அவர்கள் இந்த ஐபிஎல் தொடரில் தோல்வி அடைந்தால் அது எதிர்வினையை ஏற்படுத்தக்கூடும்.. இந்திய அணியைச் சார்ந்த இந்த மூன்று வீரர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் மிக முக்கியமானது. அவர்கள் எந்தெந்த வீரர்கள் எனப் பார்ப்போம்.

- Advertisement -

மனிஷ் பாண்டே:
இந்தியா அணியின் ஸ்டார் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே கடந்த சில ஐபிஎல் சீசன்களில் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். கடந்த மூன்று சீசங்களிலும் 30 போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் 805 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 124.03.. குறிப்பாக 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் லக்னோ அணிக்காக ஆறு போட்டிகளில் ஆடிய மனிஷ் பாண்டே 88 ரன்கள் மட்டுமே எடுத்தார் கடந்த ஆண்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 110. இந்த வருட ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக ஆட இருக்கிறார். எழுத்தின் போது அந்த அணி இவரை 2.4 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இந்த ஐபிஎல் தொடரில் இவர் ரண்களை குவிக்க தவறும் பட்சத்தில் அடுத்த வருட ஐபிஎல் போட்டிகளில் ஐபிஎல் அன் நிர்வாகங்கள் இவரை புறக்கணிக்கலாம்.

அஜிங்கியா ரஹானே:
கடந்த ஆண்டு இந்திய அணியின் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட இவர் இந்த ஆண்டு பிசிசிஐ ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறார். 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் ரகானே 2020 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் இந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 2020 ஆம் ஆண்டிலிருந்து 18 போட்டிகளில் விளையாடி இருக்கும் ரகானே 254 கண்களை மட்டுமே எடுத்திருக்கிறார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 104, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் தனது இந்திய அணிக்கான இடத்தையும் வரும் வருடங்களில் ஐபிஎல் அணிகளில் தனக்கான இடத்தையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.

ஜெய் தேவ் உனத்கட் :
13 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவின் டெஸ்ட் அணிக்கு திரும்பிய உனத்கட் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரிலும் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு ஐபிஎல் தொடர்களில் தனது முத்திரையை பதிக்க தவறி வருகிறார் உனத்கட். 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு 44 போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் 35 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். இவரது எக்கனாமிக் ரேட்டும் அதிகமாக இருக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் ஒரு ஓவருக்கு சராசரியாக 9.50 ரண்களை விட்டுக் கொடுத்திருக்கிறார் உனத்கட். இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் லக்னோ அணிக்காக ஆடும் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எதிர்காலத்தில் ஏராளமான வாய்ப்புகள் இவருக்கு காத்திருக்கிறது.

- Advertisement -