ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி செல்ல என்ன வழி? – இது நடந்தால் போதும்

0
10491

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரை விளையாடிய ஐபிஎல் தொடரிலே இப்படி ஒரு புள்ளி பட்டியலை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். தற்போது வரை 10 அணிகளுக்குமே ப்ளே ஆப் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

நம்ம ஊரு டவுன் பஸ் போல் புள்ளி பட்டியலும் நெருக்கடியாக ஒரே புள்ளியுடன் பல அணிகளும் இருக்கிறது. ஆர்சிபி அணி பத்து போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகள் உடன் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் என்ன நடக்க வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். ஆர்சிபி அணி இன்னும் நான்கு போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் மும்பை, ராஜஸ்தான்,ஐதராபாத் ஆகிய அணிகளுடன் வெளியூரில் விளையாட வேண்டியது இருக்கிறது. இதுபோன்று கடைசி லீக் ஆட்டமான மே 21ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் ஆர்சிபி அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது.

இதில் ஆர்சிபி அணி நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். ஆர் சி பி அணி இதுவரை வெளியூர் மண்ணில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றிருக்கிறது. அப்படி ஆர்சிபி அணி எஞ்சிய நான்கு ஆட்டங்களில் இரண்டு போட்டிகளில் வென்றால் 14 புள்ளிகளை தான் பெறுவார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மற்ற அணி உதவி ஆர்சிபி அணிக்கு தேவைப்படும். ஆர் சி பி அணி டாப் 2 இடத்திற்கு சென்று குவாலிபயரில் தோற்றால் கூட இன்னொரு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் அவர்கள் எஞ்சிய நான்கு போட்டிகளில் நான்கிலும் வெற்றி பெற வேண்டும். இதன் மூலம் rcb அணி 18 புள்ளிகளை பெற்று முதல் இரண்டு இடத்தை பிடிக்க முடியும்.

ஆனால் சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் இழக்க வேண்டும். ஏனென்றால் எஞ்சிய போட்டிகளில் சிஎஸ்கே வென்றால் 19 புள்ளிகளும், குஜராத் அணி 20 புள்ளிகளும் பெற்றுவிடும். இதனால் முதல் இரண்டு இடத்தை பிடிக்க ஆர்சிபிக்கு வாய்ப்பு குறைவு தான். இதனால் ஆர்சிபி அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் டெல்லி அணியிடம் தோற்றது அந்த அணிக்கு சறிவை கொடுத்திருக்கிறது.