ஐபிஎல் 2023 தொடக்க விழா? எப்போது? எதில் பார்ப்பது? யார் பங்கேற்கிறார்கள்?

0
192

ஐபிஎல் தொடரில் 16-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு ஹோம் மற்றும் அவே என பழைய பாணியில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகளுக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.

- Advertisement -

இதற்காக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கண் கவரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.

மேலும் பிரபல பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப் தொடக்க விழாவில் நடனம் ஆடுகிறார். அது மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய திரை உலகில் ஜொலிக்கும் தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தானா ஆகியோரும் இந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

மேலும் முதல் போட்டியில் விளையாடும் கேப்டன்களுக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. தோனியும், ஹர்திக் பாண்டியாவும் ஸ்பெஷல் வாகனம் ஒன்றில் மைதானத்தை சுற்றி வலம் வர உள்ளார்கள். இந்த தொடக்க விழா சரியாக மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.அதன் பிறகு தான் ஏழு மணிக்கு டாஸ் வீசப்படும்.தொடக்க விழாவை இலவசமாக ஜியோ சினிமா என்ற ஒடிடி  ஆப்பில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

- Advertisement -

தொலைக்காட்சியில் பார்க்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலை ரசிகர்கள் பயன்படுத்தலாம். இதனிடையே இன்றைய ஆட்டத்தில் பல வித்தியாசமான அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது. எப்போதும் டாஸ் போடுவதற்கு முன்பு கேப்டன்கள் தங்களுடைய அணியை தேர்வு செய்து நடுவரிடம் அளிக்க வேண்டும்.

ஆனால் இப்போது டாஸ் போடப்பட்டு அதற்கு ஏற்றார் போல் நாம் அணியை தேர்வு செய்து அறிவிக்கலாம் என்ற புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இன்றைய ஆட்டத்தில் இம்பாக்ட் பிளேயர் விதி கடைபிடிக்கப்படும். இதைத்தவிர நடுவர்கள் வைடு மற்றும் நோ பாலை தவறாக அறிவித்தாலோ இல்லை வழங்க மறுத்தாலும் டி ஆர் எஸ்  பயன்படுத்தி நடுவரின் முடிவு மறுபரிசீலனை செய்யலாம்.