பெஸ்ட் பினிஷர் அட்வைஸ் கொடுத்தா எப்படிங்க மிஸ் ஆகும்? தோனி கொடுத்த லைப் செஞ்சிங் அட்வைஸ் குறித்து ரிங்கு சிங் பேட்டி!

0
1477

பினிஷிங் ரோல் ஆடும் எனக்கு, பினிஷ் செய்வது பற்றி தோனி கொடுத்த சில அறிவுரைகள் என் வாழ்க்கையையே புரட்டி போட்டதாக இருந்தது அதுவரை நான் கேட்டிராத அறிவுரைகள் அவை என ரிங்கு சிங் தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

இந்த வருட ஐபிஎல் சீசன் பல இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்கவிதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓப்பனிங் விளையாடிய ஜெய்ஸ்வால் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பினிஷிங் விளையாடிய ரிங்கு சிங் இருவரும் ஓரமாக செயல்பட்டனர்.

- Advertisement -

ஜெய்ஸ்வால், 14 போட்டிகளில் ஐந்து அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 625 ரன்கள் குவித்துள்ளார். கிட்டத்தட்ட 49 சராசரியாக வைத்திருக்கிறார். கூடுதலாக இவரது ஸ்ட்ரைக் ரேட் 164 ஆகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓப்பனிங் இவர் விளையாடி கொடுத்ததே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரிங்கு சிங் இந்த சீசனில் குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர் அடித்து போட்டியை ஃபினிஷ் செய்து கொடுத்து பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். அத்துடன் நிற்கவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி, சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி, கடைசியாக லக்னோ அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் எங்கேயோ இருந்த ஆட்டத்தை கிட்டத்தட்ட ஃபினிஷ் செய்யும் தருவாய்க்கு எடுத்துச் சென்று ஒரு ரன்னில் தவறவிட்டார்.

இவர் 14 போட்டிகளில் கிட்டத்தட்ட 60 சராசரிகளுடன் 474 ரன்கள் அடித்திருக்கிறார். இவர் அடித்த நான்கு அரைசதங்களும் அணிக்கு மிக முக்கியமான கட்டத்தில் வந்தவை.

- Advertisement -

இந்திய அணிக்கு அடுத்த பினிஷர் ஆக இவர் தான் இருப்பார் என்று கருத்துக்கள் நிலவி வருகின்றன. அதில் சிலர், ரிங்கு சிங் இருக்கும் ஃபார்மை இந்த வருடமே பயன்படுத்தி 50 ஓவர் உலகக் கோப்பையில் எடுத்துக்கொள்ளலாம் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணிக்கு பெஸ்ட் ஃபினிஷராக இருந்து வந்துள்ள மகேந்திர சிங் தோனியிடம் பினிஷிங் ரோல் குறித்து பெற்ற சில அறிவுரைகள் என் வாழ்க்கையையே மற்றும் அளவிற்கு இருந்துள்ளது என்று தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் ரிங்கு சிங்.

“எனக்கு இந்த ஃபினிஷிங் ரோல் நன்றாக பழகி விட்டது. சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது மாகி பாய் இடம் சென்று, ‘நெருக்கமாக செல்லும் போட்டிகளை எப்படி பினிஷ் செய்யவேண்டும்?’ என கேட்டேன். அதற்கு அவர், ‘பவுலர்கள் என்ன பந்தை போடுவார்கள் என்பதை யோசிக்க வேண்டாம். அதை அவர்கள் பார்த்துக்கொள்வர்கள். நீ உனது பேட்டிங் பலம் மீது கவனம் வைத்துக்கொண்டு எதிர்கொள்! பல நேரம் உனக்கு சாதகமாக அமையும். சில நேரம் அமையாது. அப்போது அமையாத போட்டிகள் குறித்து நினைத்துக்கொண்டே இருக்கக்கூடாது. அடுத்த போட்டி மீது கவனம் செலுத்த வேண்டும்.’ என்றார். அதைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன்.” என்றார்.

மேலும் இந்தியாவிற்கு ஆடுவது குறித்து பேசிய அவர், “நேரம் வரும்போது எனக்கு வாய்ப்பு கிடைக்கும். அதுவரை நான் அதைப்பற்றி நினைக்கமாட்டேன். என்னுடைய ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவேன். எனக்கு கொடுக்கப்பட்ட வேலையில் மட்டுமே என் கவனம் இருக்கிறது.” என்றார்.