போன சீசன் செஞ்சுரியாக அடித்துதள்ளிய ஜோஸ் பட்லர்… இந்த சீசன் 5 டக் – மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்த பட்லர்!

0
222

இந்த சீசனில் 5 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனையில் இடம்பிடித்துள்ளார் ஜோஸ் பட்லர்.

ஜோஸ் பட்லர்-க்கு இந்த வருட ஐபிஎல் தொடர் மறக்கக்கூடிய ஒன்றாகவே அமைந்திருக்கிறது. இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் நான்கு முறை அரைசதம் மற்றும் நான்கு முறை டக்அவுட் ஆகி இருந்தார்.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்று கிட்டத்தட்ட பிளே-ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் இருக்கிறது. கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக விளையாடி வருகிறது.

பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்திருந்தது. இந்த இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழக்கம் போல ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இருவரும் ஓபனிங் செய்தனர்.

188 ரன்கள் இலக்கை துரத்துவதற்கு இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. துரதிஷ்டவசமாக இந்த போட்டியிலும் பட்லர் டக் அவுட் ஆனார். இந்த சீசனில் மட்டுமே ஐந்து முறை டக் அவுட் ஆகி படுமோசமான சாதனை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

- Advertisement -

ஒரு சீசனில் அதிகபட்சமாக நான்கு முறை டக் அவுட் ஆனதே மோசமான சாதனையாக இருந்தது. இப்போது பட்லர் ஐந்து முறை டக் அவுட் ஆகி அதில் முன்னணியில் இருக்கிறார்.

கடந்த சீசனில் நான்கு அரைசதம் மற்றும் நானசதங்கள் விலாசி மொத்தம் 863 ரன்கள் குவித்த பட்லர், இந்த சீசனில் இதுவரை 392 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குஓப்பனிங்கில் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போவதற்கு இது ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.