பென் ஸ்டோக்ஸ், தீபக் சஹர் இனியும் ஐபிஎல் ஆடுவார்களா? முக்கியமான அப்டேட் கொடுத்த சிஎஸ்கே நிர்வாகம்!

0
847

போட்டியின் பாதியிலேயே காலில் காயம் ஏற்பட்டு வெளியேறிய தீபக் சஹர் மற்றும் குதிகாலில் காயம் ஏற்பட்டதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ் இருவரின் உடல்நிலை குறித்தும் அப்டேட் வெளியிட்டு இருக்கிறது சிஎஸ்கே அணி நிர்வாகம். இது சற்று அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் 16.25 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்ட நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடருக்கு வரும்போதே உடலில் சில அசவுரியங்ளுடன் வந்தார்.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் காலில் பிரச்சனை இருக்கிறது. ஆகையால் துவக்கத்தில் சில போட்டிகள் பந்துவீச முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளில் உடல் அளவில் நன்றாக விளையாடினார்.

இரண்டாவது லீக் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசியதால் முழுமையாக குணமடைந்து விட்டார் என்று சற்று ஆறுதலாக இருந்தது. அச்சமயத்தில் திடீரென்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு குதிகாலில் காயம் ஏற்பட்டதால் அப்போட்டியில் விளையாட முடியவில்லை என்று கூறியது மீண்டும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில் இவரது உடல்நிலை குறித்து அணி நிர்வாகத்தின் தரப்பிலிருந்து சில அப்டேட்கள் வந்திருக்கின்றன. “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு குதிகாலில் காயம் ஏற்பட்டது. ஆகையால் பென் ஸ்டோக்ஸ் விளையாட வைக்கப்படவில்லை. கடந்த இரண்டு நாட்களில் இவரது காயம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. உரிய சிகிச்சைகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நல்ல முன்னேற்றம் காணமுடிகிறது. அடுத்த போட்டியில் விளையாடுவது பற்றி போட்டிக்கு முந்தைய நாளில் தெரிவிக்கப்படும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஓரிரு போட்டிகள் அவர் வெளியிலும் அமர்த்தப்படலாம். கேப்டனின் முடிவு தான்.” என்றும் அணி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து வெளிவந்த தகவல்கள் கூறுகின்றன.

- Advertisement -

முதல் இரண்டு போட்டிகளில் நல்ல உடல் நிலையுடன் காணப்பட்ட தீபச் சஹர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது முதல் ஓவரில் பாதியிலேயே காலின் தொடை பகுதியில் வலி ஏற்பட்டு தட்டுதடுமாறி முதல் ஓவரை முடித்துவிட்டு வெளியேறினார்.

பவர்-பிளே ஓவர்களில் மிக முக்கியமான பவுலராக இருந்து வரும் இவருக்கும் இப்படி நேர்ந்திருப்பது சற்று பின்னடைவை தந்திருக்கிறது. இவரது உடல்நிலை குறித்து சிஎஸ்கே அணியின் தரப்பிலிருந்து வெளிவந்த தகவல்கள் படி, “தீபக் சஹர் தொடர்ந்து ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறார். ஒவ்வொரு நாள் சிகிச்சைக்குப் பின்னரும் அவரது கால் பகுதியில் ஸ்கேன் செய்யப்பட்டு எந்த அளவிற்கு முன்னேற்றம் இருக்கிறது என்பதை கண்காணித்து வருகிறோம். அடுத்த போட்டிக்கு அவர் இருப்பாரா என்பதை உறுதியாக கூற இயலாது. போதுமானவரை அவருக்கு ஓய்வு தேவை.” என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், தீபக் சஹர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் கட்டாயம் ஓரிரு போட்டிகள் வெளியில் அமர்த்தபடலாம். முழுமையாக குணமடைந்த பிறகே அவர்கள் மீது சிஎஸ்கே அணி நிர்வாகம் ரிஸ்க் எடுக்க நினைக்கும் என்று தெரியவந்துள்ளது.

மும்பைக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, தீபக் சஹர் இல்லாதபோதும் சிஎஸ்கே அணி அபாரமான வெற்றியை பெற்றது. இதனால் அடுத்த சில போட்டிகளுக்கு இதே காம்பினேஷன் தொடரலாம். வெற்றி பெற்ற அணியின் காம்பினேஷனை இக்கட்டான சூழல் தவிர எக்காரணம் கொண்டும் மாற்றமாட்டார்கள் என்பது தோனியின் பாணி.