ஐபிஎல் 2010 ஜடேஜாவுக்கு தடை.. ஹர்திக் பாண்டியாவுக்கும் தற்பொழுது தடை வருமா?.. விதி என்ன சொல்கிறது?

0
11183
Hardik

2022 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் புதிய அணியாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட ஹர்திக் பாண்டியா வாங்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டார்.

அவர் முதல் சீசனிலேயே சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய அணிக்கு ஐபிஎல் கோப்பையை பெற்றுத் தந்தார். மேலும் இரண்டாவது சீசனில் இந்த வருடம் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

மேலும் இரண்டாவது முறை தொடர்ச்சியாக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு இருந்த பொழுது, ரவீந்திர ஜடேஜா அதை சிஎஸ்கே அணிக்காக தட்டிப் பறித்தார்.

இப்படி ஐபிஎல் தொடரில் தனக்கென ஒரு அணியாடு வெற்றிகரமான பயணத்தை கேப்டனாக ஆரம்பித்த ஹர்திக் பாண்டியா திடீரென தன்னுடைய பழைய அணிக்கே திரும்பி அதிர்ச்சி தந்திருக்கிறார்.

இது இரண்டு முதலாளிகள் சேர்ந்து செய்த ஏமாற்று வேலை, இப்படி ஒரு வீரரை மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிக்குத் தரும்பொழுது, அது ஒட்டுமொத்தமாக மற்ற எட்டு அணிகளின் வெற்றி வாய்ப்பையும் பெரிய அளவில் பாதிக்கும் என்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.

- Advertisement -

மேலும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் சம்பந்தப்பட்ட இரு அணிகள் மீது நடவடிக்கை கட்டாயம் எடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

2010 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகிய ரவீந்திர ஜடேஜா அந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் தடை செய்யப்பட்டார். காரணம் அவர் நேராக மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தன்னை வாங்குவது குறித்தான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது ஐபிஎல் விதிகளுக்கு எதிரானது.

தற்பொழுது ஹர்திக் பாண்டியா மீது இதேபோல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு வருகிறார்கள். ஆனால் இரு அணிகள் பேசி வீரரை விடுவித்ததாக கூறப்படுகின்ற காரணத்தினால், ஹர்திக் பாண்டியா மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

மேலும் 2 அணிகளும் வீரர்களை மாற்றிக் கொள்வது மட்டுமில்லாமல், ஒரு அணியின் வீரரை இன்னொரு அணி அவருக்குரிய பணத்தை கொடுத்தும் வாங்கிக் கொள்ளலாம் என்பதும் ஐபிஎல் விதி. ஹர்திக் பாண்டியா விஷயத்தில் எல்லாமே விதிப்படி நடந்திருக்கின்ற காரணத்தினால், இவர்கள் நடவடிக்கையில் இருந்து தப்பி இருக்கிறார்கள் என்று கூற வேண்டும். ஆனாலும் இதனால் மற்ற அணிகள் பாதிக்கும் என்பது உறுதி!