நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா இங்கிலாந்து தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கின்றன. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு விஷயம் மட்டும் நடந்தால் அந்த அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றும் என ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிராட் ஹாட் ஹாக் கூறியிருக்கிறார்.
நாளை டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டு அரையிறுதி போட்டிகளும் நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி டிரினிடாட் பிரயன் லாரா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இரண்டாவது அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கயானா பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரண்டு பெரிய அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டியில் வெல்லக்கூடியவர்கள் உலகக் கோப்பை கைப்பற்றுவார்கள் என பெரும்பாலும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் பிராட் ஹாக் வேறு விதமான ஒரு கருத்தை கொண்டு இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “தென் ஆப்பிரிக்கா இங்கிருந்துதான் முளைக்கிறது அவர்கள் ஆச்சரியமானவர்களாக இருக்கிறார்கள். நான் ஹென்றிக்சை ஒரு வீரராக விரும்புகிறேன். அவர்கள் ஒரு சுவரை முதலில் எழுப்ப வேண்டும். சுழல் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும். ஹென்றி கிளாசன் இதைச் சிறப்பாக செய்வார். அங்கிருந்து ஆப்கானிஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு வர வேண்டும்.
இந்த முறை தென் ஆப்பிரிக்கா அணிதான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று நினைக்கிறேன். அவர்களிடம் சம்சி மற்றும் கேசவ் மகராஜ் என இரண்டு நல்ல சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். நான் பெரிய நாடுகளைப் பற்றி யோசிக்கவில்லை. அவர்கள் நம்பிக்கையுடன் சென்று விளையாட வேண்டும். அவர்கள் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி விட்டால் நிச்சயம் இறுதிப் போட்டியில் எந்த அணி வந்தாலும் வீழ்த்தி சாம்பியன் ஆவார்கள்.
இதையும் படிங்க : கோலி அவுட் ஆனா கவலையே இல்ல.. அதுக்கு காரணம் ரோகித்தின் இந்த மந்திரம்தான் – கில்கிறிஸ்ட் கருத்து
தென் ஆப்பிரிக்கா ஒரு சமநிலையான அணியாக இருக்கிறது. மேலும் அவர்களிடம் நல்ல ஆக்ரோஷ அணுகுமுறையும் இருக்கிறது. கேப்டனாக எனக்கு மார்க்ரம்மை பிடிக்கும். அவர் மிகவும் சரியானவர் மற்றும் கம்போஸ் ஆனவர். மேலும் அணியும் நல்ல கம்போஸ் ஆக இருக்கிறது. மற்றபடி பீதி அடையாமல் கண்டிஷனுக்கு தகுந்தபடி விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.