“இன்சமாமுக்கு மனநிலை சரியில்லை.. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்க!” – ஹர்பஜன் சிங் தன் மீதான குற்றச்சாட்டுக்கு  பதிலடி!

0
783
Harbajan

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டிக்குள் எழுந்த சர்ச்சையை தாண்டி வருவதற்கே நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டது.

இதைவிட முக்கியமாக பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாடுவதற்குள் நிறைய கருத்து மோதல் இரு தரப்பிலும் இருந்து கொண்டிருந்தது.

- Advertisement -

இதையெல்லாம் ஒரு வழியாக சமாளித்து இந்தியா வந்த பாகிஸ்தான் அணி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய பொழுது மீண்டும் சர்ச்சைகள் வெடித்தது.

இந்த நிலையில் எல்லாம் ஒரு வழியாக முடிந்து மூன்றாவது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் பாகிஸ்தான் அணி சொந்த நாட்டுக்கு திரும்பி இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ஹர்பஜன் சிங் குறித்து ஒரு சர்ச்சையான கருத்தை கூறி தற்பொழுது இது சமூக வலைதளத்தில் பெரிய பிரச்சனைகளை உண்டு செய்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்தியா பாகிஸ்தான் தொடரின் போது மௌலானா தாரிக் ஜமீலின் பேச்சைக் கேட்டு இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கு நெருக்கமாக ஹர்பஜன் சிங் இருந்தார் என்று இன்சமாம் கூறியிருந்தார். தற்பொழுது இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது.

இது குறித்து ஹர்பஜன்சிங் கூறும் பொழுது ” யாராவது இன்சமாமை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது. அவர் மனநிலை சரியில்லை. தயவு செய்து அவரை யாராவது மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர் தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். நான் ஒரு சீக்கியன். நான் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவன். நான் இதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஊடகங்கள் முன்னால் இன்சமாம் இப்படி ஒரு நாடகமாடி இப்படி ஒரு அறிக்கையை எப்படி கொடுக்க துணிந்தார் என்று தெரியவில்லை. அவர் என்ன மாதிரியான குடிபோதையில் இருக்கிறார் என்ன புகைக்கிறார் என்று தெரியவில்லை. இப்படி இருப்பவர்கள் தான் அடுத்த நாள் காலையில் எது சொன்னாலும் தெரியாமல் போவார்கள்!” என்று கடுமையாக கூறியிருக்கிறார்!

தற்பொழுது உலகக்கோப்பை அரை இறுதி போட்டிகள் இருக்கின்ற காரணத்தினால் இந்த பிரச்சனை குறித்து பெரிய அளவில் இன்னும் விவாதங்கள் வளராமல் இருக்கிறது. ஆனால் நிச்சயம் இந்தியா விளையாடி முடித்த பிறகு இதற்கு பெரிய அளவில் கண்டனங்கள் எழும் என்று தெரிகிறது!