ஐபிஎல் 17வது சீசனில் அணிகள் தங்களின் இரண்டாவது ஆட்டத்தை விளையாட ஆரம்பித்திருக்கின்றன. இன்றைய போட்டியில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் எதிர்த்து விளையாடிய போட்டி நடைபெற்றது.
இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ஸ்வால் 5(7), பட்லர் 11(16), சஞ்சு சாம்சன் 15(14), ரவிச்சந்திரன் அஸ்வின் 29(19) ரன்கள் என வெளியேறினார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒருநிலையில் 150 ரன்கள் எட்டுவது கடினம் என்பது போல் தெரிந்தது. ரியான் பராக் அஸ்வின் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.
இதற்கு அடுத்து ரியான் பராக் உடன் ஜோடி சேர்ந்த துருவ் ஜுரல் 12 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி அதிரடியாக 23 பந்தில் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதற்கு அடுத்து சிம்ரன் ஹெட்மயர் உள்ளே வர, இந்த ஜோடியும் அதிரடியாக 16 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்தது. ரியான் பராக் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன், 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். சிம்ரன் ஹெட்மையர் 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி உள்ளே வந்த டெல்லி அணிக்கு மிட்சல் மார்ஸ் 23(12), டேவிட் வார்னர் 49(39), ரிக்கி புய் 0, கேப்டன் ரிஷப் பண்ட் 28(26), அபிஷேக் போரல் 9(10) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த நிலையில் அக்ஷேற்பட்டில் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களத்தில் இருந்தார்கள். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது.
இந்த நிலையில் 19-வது ஓவரை வீசிய சந்திப் சர்மா 15 ரன்கள் கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீசிய ஆவேஸ் கான் மிகச் சிறப்பாக பந்துவீசி வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் ஐந்து விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதையும் படிங்க : வீடியோ: 5 பந்தில் 3 சிக்ஸர்.. டெல்லிக்கு தண்ணி காட்டிய அஸ்வின்.. சங்கக்கராவின் மைண்ட் கேம்
இறுதியாக இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில், இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு அடுத்து இரண்டாவது வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தரப்பில் பர்கர் மற்றும் சாகல் இருவரும் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். மேலும் இதுவரையில் இந்த ஐபிஎல் தொடரில் சொந்த மைதானத்தில் விளையாடும் அணிகள் மட்டுமே வெற்றி பெற்று வருகின்றன!