இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக்கோப்பை தொடரை வென்றதற்கு அடுத்து, சுப்மன் கில் தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு இளம் இந்திய அணி ஜிம்பாப்வே சென்றது. இந்த இளம் அணி இன்று ஐந்தாவது டி20 போட்டியில் வென்று தொடரை 4-1 எனக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் முதல்முறையாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்ற இளம் வீரர் ரியான் பராக் கிடைத்த அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக 500க்கும் மேற்பட்ட ரன்கள் குறித்து இரண்டாவது இடத்தை ரியான் பராக் பிடித்தார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் எல்லா வடிவத்திலும் மிகச் சிறப்பாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் செயல்பட்டு வந்தார்.
இதன் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இவருக்கு முதல் முறையாக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முதல் போட்டியில் சரியாக பேட்டிங் செய்யாமல் ஆட்டம் இழந்தார். இரண்டாவது போட்டியில்பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரண்டு போட்டியில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாத இவர் இன்று ஐந்தாவது போட்டியில் விளையாடினார்.
மேலும் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை 40 ரன்களில் இழந்து தடுமாறிய பொழுது தன்னுடைய ஐபிஎல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யின் கேப்டன் சஞ்சு சாம்சன் உடன் இணைந்து 56 பந்துகளில் 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் வருவதற்கு உதவியாக இருந்தார். மேலும் 24 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் தொடரை இந்திய அணி வென்றதற்கு பிறகு பேசி ரியான் பராக் “முதல் ஆட்ட தோல்விக்கு பிறகு நாங்கள் எல்லோரும் விழித்தோம். அதற்குப் பிறகு நாங்கள் சிறப்பான நிலைக்கு வந்தோம். எங்கள் வீரர்களைப் பற்றி நான் உண்மையில் பெருமைப்படுகிறேன். இதை மிகவும் அனுபவித்தேன். நாங்கள் இருவரும் எங்களுடைய இந்திய ஜெர்சியை ஒன்றாக பிரித்தோம். 2018ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக்கோப்பையில் ஒன்றாக விளையாடினோம். அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் ஒன்றாக விளையாடவில்லை. இப்பொழுதுதான் சேர்ந்து விளையாடுகிறோம்.
இதையும் படிங்க : முதல்ல அந்த வேலை செய்ற வீரர்களை மதிக்கணும்.. இந்த தொடர் தோல்விக்கு காரணமே இதுதான் – சிக்கந்தர் ராஸா பேச்சு
நான் பேட்டிங் செய்யும்பொழுது சஞ்சு சாம்சன் பையா உடன் பேசினேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அமைத்த பார்ட்னர்ஷிப்பை இங்கும் கொண்டு வர வேண்டும் என்று சொன்னேன். ஆனால் இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு நரகம் மாதிரியானது. இருந்த போதிலும் நாங்கள் நன்றாக செய்ததில் மகிழ்ச்சி. கில்லின் தலைமையில் விளையாடுவது வேடிக்கையானது. நாங்கள் அண்டர் 16 அணியில் ஒன்றாக விளையாடியிருக்கிறோம். அதேபோல் அவர் கேப்டனாக இல்லாத போதும் கூட களத்தில் கேப்டன் போல தான் இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.