உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு ராகுல் உனட்கட்டுக்கு பதிலா இந்த பசங்களை கூட்டிட்டு போங்க – ரவி சாஸ்திரி செம ஐடியா!

0
3749
WTC2023

தற்பொழுது ஐபிஎல் டி20 தொடர் மார்ச் 31ம் தேதி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் மே மாதம் 28ஆம் தேதி முடிவடைகிறது!

இதற்கு அடுத்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுகிறது!

- Advertisement -

இந்தப் போட்டி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் மாதம் ஏழாம் தேதி துவங்குகிறது. இதற்கான அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் காயம் அடைந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கே எல் ராகுல் விலகி இருக்கிறார். மேலும் உனட்கட் காயமடைந்து இருக்கிறார்.

இப்பொழுது வரை இந்த இருவருக்கு பதிலான எந்த விதமான வீரர்கள் அறிவிப்பும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடமிருந்து வரவில்லை. உனட்கட் காயம் குறித்தும் தெளிவான செய்திகள் இல்லை.

- Advertisement -

தற்பொழுது இந்த வீரர்களுக்கு யார் மாற்று வீரர்கள் ஆக இருப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். கேஎல் ராகுல் இரண்டாவது விக்கெட் கீப்பராக அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவி சாஸ்திரி இது பற்றி கூறும் பொழுது
” கே எஸ் பரத் இப்பொழுது விளையாட வேண்டும். இங்கிலாந்தில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவதாக இருந்தால் ஒரு நல்ல விக்கெட் கீப்பர் உடன்தான் நாம் சென்றாக வேண்டும்.

இப்படி சென்று ஒரு அதிர்ச்சிகரமான அவசர நிலை ஏற்பட்டால் மாற்று விக்கெட் கீப்பர் உடனடியாகத் தேவை. இதற்கு ஒரு பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும். இதற்கு சர்பராஸ் கான் சரியானவராக இருப்பார். அவர் உள்நாட்டு தொடரில் ரன்களை குவித்து தன்னை நிரூபித்து இருக்கக்கூடியவர்.

உனட்கட்டுக்கு சரியான மாற்று அர்ஸ்தீப் சிங்தான். ஏனென்றால் அவர் பந்தை மிக நன்றாக ஸ்விங் செய்யக்கூடியவர். மற்றும் நல்ல சிவப்பு பந்து சாதனைகளையும் உள்நாட்டில் வைத்திருப்பவர். எனவே இவரது தேர்வு பல்வேறு வகைகளுக்கும் அர்த்தமுள்ளதாக இருக்கும்!” என்று தெரிவித்திருக்கிறார்!