“காசுக்காக ஐபிஎல்ல காயத்தோட   விளையாடினா நாட்டுக்காக விளையாட முடியாது” – காயமே அடைந்திடாத உலக கோப்பை இந்திய வீரர் தாக்கு!

0
1098
Bumrah

முதல்முறையாக முழுமையாக இந்தியாவில் வைத்து நடத்தப்பட இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான நாட்கள் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது!

இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே குஜராத் அகமதாபாத் மைதானத்தில் துவங்குகிறது. இதே மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி முடிவடைகிறது.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தயாரிப்புகளில் விளையாடுவதற்கு தகுதி பெற்ற 10 அணிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. சொந்த நாட்டில் நடப்பதால் இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயம் பெரிய அளவில் இருக்கிறது. மேலும் பெரிய கோப்பைகளை வென்று 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் மிடில் வரிசையில் நான்காம் இடத்தில் உறுதியான வீரராக அடையாளம் காணப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்ததும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் எதிர்பாராத விதமாக காயம் அடைந்ததும், இந்திய அணியின் பௌலிங் யூனிட்டின் அஸ்திரமான ஜஸ்ட்ப்ரீத் பும்ரா காயமடைந்ததும் இந்திய அணி நிர்வாகத்திற்கு இந்த உலகக் கோப்பைக்கான தயாரிப்புகளில் பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.

இதுகுறித்து தன் வாழ்நாளில் விளையாட்டில் காயமே அடைந்திடாத இந்தியாவுக்காக முதல் உலகக் கோப்பையை வென்ற தமிழ் தேவ் கூறும் பொழுது ” பும்ரா என்ன ஆனார்? அவர் மிகவும் நம்பிக்கையாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் இப்பொழுது நமக்கு இல்லை என்றால் நாம் அவருக்காக நேரத்தை வீணடித்து இருக்கிறோம் என்றுதான் அர்த்தம். ரிஷப் பண்ட் நிலைமை என்ன? அவர் இருந்திருந்தால் நம்முடைய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகவும் நன்மையாக இருந்திருக்கும்.

- Advertisement -

கடவுள் என் மீது கருணை உள்ளவர். நான் விளையாட்டில் காயம் அடைந்தது கிடையாது. ஆனால் இன்று வீரர்கள் ஒரு வருடத்தில் பத்து மாதங்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். எல்லோரும் தங்களை தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். ஐபிஎல் நல்ல விஷயம்தான் அதே சமயத்தில் ஐபிஎல் வீரர்களை கெடுக்கவும் செய்யும். ஐபிஎல் தொடருக்காக நீங்கள் சிறிய காயத்தோடு விளையாடுவீர்கள். அது உங்களை நாட்டுக்காக விளையாட விடாமல் செய்துவிடும். இப்படியான நேரத்தில் ஐபிஎல் விளையாடாமல் நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். நான் இந்த விஷயத்தில் மிகவும் வெளிப்படையாகவே இருக்கிறேன்.

சிறிய காயம் என்றால் நீங்கள் முக்கியமான ஆட்டம் என்றால் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறீர்கள். இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வீரர்கள் எவ்வளவு விளையாட வேண்டும் என்பதை வகுத்து புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அடிப்படையான விஷயம். இன்று உங்களிடம் பணம் வளம் எல்லாமே இருக்கலாம், ஆனால் எதிர்காலத்திற்கான தொலைநோக்கான மூன்றாண்டு, ஐந்தாண்டு காலண்டர்கள் இல்லை. கிரிக்கெட் வாரியத்தில் ஏதோ தவறு இருப்பதை இது வெளிப்படையாக காட்டுகிறது!” என்று கூறியிருக்கிறார்!