INDvsSL.. பேச்சை மீறிய ஜடேஜா.. கடுப்பான ரோகித்.. என்ன நடந்தது?.. சலசலப்பான மைதானம்!

0
10629
Jadeja

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மும்பை மைதானத்தில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதிக் கொள்ளும் போட்டி தற்பொழுது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிக்கான தாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் கேப்டன் முதலில் தமது அணி பந்து வீசும் எனும் ஆச்சரியமானமுடிவை அறிவித்தார். மும்பையில் பகல் நேரத்தில் கடுமையான வெயில் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இன்பாம் பேட்ஸ்மேன் கேப்டன் ரோஹித் சர்மா முதல் பந்தில் பவுண்டரி அடித்து இரண்டாவது பந்தில் மதுசங்காவிடம் கிளீன் போல்ட் ஆனார். இதற்கு அடுத்து கில் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்து அணிக்கு ரன்கள் கொண்டு வர ஆரம்பித்தார்கள்.

மிகச் சிறப்பாக விளையாடிய இருவரும் மீண்டும் மதுசங்காவிடமே ஆட்டம் இழந்தார்கள். கில் 92, விராட் கோலி 88 ரன்கள் என வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த கே எல் ராகுல் 21, சூரியகுமார் யாதவ் 12 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதனால் கடைசி பேட்ஸ்மேன்களான ஸ்ரேயாஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அணியை நல்ல ஸ்கோருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு இருந்தது. ஸ்ரேயாஸ் இந்த முறை பொறுப்பாகவும் அதே சமயத்தில் அதிரடியாகவும் விளையாடி 56 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டம் நடந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து முகமது சமியை வைத்துக்கொண்டு இந்திய அணியை 350 ரன்கள் தாண்ட வைக்க வேண்டிய பொறுப்பு ரவீந்திர ஜடேஜாவுக்கு இருந்தது. மேலும் இந்திய அணிக்கு 49வது ஓவர் முடிவில் 350 ரன்கள் வந்தது.

இந்த நிலையில் ஐம்பதாவது ஓவர் முழுமையையும் ரவீந்திர ஜடேஜாவை ஆடச் சொல்லி ரோஹித் சர்மாவிடமிருந்து சொல்லப்பட்டது. ஆனால் ரவீந்திர ஜடேஜா தேவையில்லாமல் சிங்கிள் ஆடி சமியை விளையாட விட, அது அணிக்கு எந்த விதத்திலும் நன்மையாக முடியவில்லை. இதனால் ரோஹித் சர்மா பெவிலியனில் இருந்து கோபப்பட்டது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்து இருக்கிறது. ரவீந்திர ஜடேஜா எட்டாவது விக்கெட்டாக 24 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்!