INDvsSA.. நாளை இந்திய பிளேயிங் லெவன்.. சாய் திலக் வெளியே?.. 2 புதிய வீரர்கள் உள்ளே?.. யாருக்கு வாய்ப்பு?

0
2324
ICT

இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரை இந்திய அணி கேஎல்.ராகுல் தலைமையில் விளையாடுகிறது.

ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி தரும் விதமாக, அடுத்து க்யூபர்காவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை சமன் செய்தது.

- Advertisement -

இதையடுத்து நாளை பேர்ல் போலன்ட் பார்க் மைதானத்தில் இறுதி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. தொடர் சமநிலையில் உள்ளதால், இந்த போட்டியை வெல்லும் அணியை தொடரை வெல்லும். மேலும் இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் யார் தொடரை முதலில் வெல்வது என்பது முடிவாகும். டி20 தொடர் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறி இருக்க, திலக் வர்மா மூன்றாவது இடத்திற்கு கொண்டுவரப்பட்டு, ரிங்கு சிங் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் திலக் மற்றும் ரிங்கு இருவரும் பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கவில்லை.

அதே சமயத்தில் முதல் போட்டியில் பேட்டிங் செய்ய பெரிய வாய்ப்பு கிடைக்காத திலக் வர்மாவுக்கு கடந்த போட்டியில் மட்டுமே முழுமையாக வாய்ப்பு கிடைத்தது. எனவே ஒரு போட்டியை வைத்து நீக்க முடியாது. மேலும் ரிங்கு சிங்கும் ஒரு போட்டியில்தான் விளையாடியிருக்கிறார். இதே நிலைதான் சஞ்சு சாம்சனுக்கும்

- Advertisement -

இந்திய பேட்டிங் யூனிட்டில் இரண்டு போட்டிகளிலும் முழு வாய்ப்பை பெற்றவர்களாக துவக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் இருக்கிறார்கள். இதில் சாய் சுதர்சன் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டு இருக்க, ருத்ராஜ் இரண்டு ஆட்டத்திலும் சரியாக விளையாடவில்லை.

மேலும் இந்திய பவுலிங் யூனிட்டில் சுழற் பந்துவீச்சாளர்கள் இருவரும் முதல் ஆட்டத்தில் பெரிய வாய்ப்பை பெறவில்லை. மேலும் வேகப்பந்துவீச்சாளர்கள் டி20 உலகக் கோப்பைக்கு வெள்ளைப்பந்தில் பரிசோதிக்கப்பட இருக்கிறார்கள்.

எனவே எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் பொழுது இரண்டாவது ஆட்டத்தில் களம் இறங்கிய அதே இந்திய அணி தான் மூன்றாவது ஆட்டத்திற்கும் களம் இறங்கும் என்று தெரிகிறது. ரஜத் பட்டிதார் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோருக்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாகவே இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்:

ருதுராஜ், சாய் சுதர்சன், திலக் வர்மா கேஎல்.ராகுல், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான் மற்றும் முகேஷ் குமார்.