INDvsSA டெஸ்ட்.. அஷ்வின் விளையாடுறது சந்தேகம்தான்.. ஆடுகள தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்!

0
217
Ashwin

இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கிறிஸ்மஸ் முடிந்து அடுத்த நாள் துவங்க இருக்கிறது.

தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் வேகம் மற்றும் பவுன்ஸ் நிறைய இருக்கும். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் அவர்களுடைய ஆடுகளம் வேகப்பந்து வீச்சிக்கு சாதகமான ஒன்று.

- Advertisement -

எனவே இதன் காரணமாகவே இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வெற்றி இன்னும் வரவில்லை. கடந்த முறை வெல்வதற்கு அருமையான வாய்ப்பு இருந்து விராட் கோலி தலைமையிலான அணி அதை தவறவிட்டது.

அதே சமயத்தில் வேகப்பந்து வீச்சை எதிர்த்து விளையாடவும், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை பயன்படுத்திக் கொள்ளவும், தற்போது இந்திய அணியில் தரமான வீரர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடர்களை வெல்வதற்கான பந்துவீச்சாளர்கள் இந்திய கிரிக்கெட்டில் உருவாகி விட்டார்கள்.

மேலும் இந்திய பேட்டிங் யூனிட்டை எடுத்துக் கொண்டாலும் மிக வலிமையாக இருக்கிறது. கேஎல்.ராகுல் கேஎல் ராகுல் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யும் பொழுது வலிமை அதிகரிக்கிறது. எனவே இந்த முறை இந்திய அணி வரலாற்றை மாற்றி எழுதும் என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.

- Advertisement -

இந்தச் சூழ்நிலையில் ஆடுகளம் எப்படி செயல்படும் என்றும் வானிலை எப்படி இருக்கிறது என்றும், முதல் டெஸ்ட் நடக்க இருக்கும் செஞ்சூரியன் மைதானத்தின் ஆடுகளத் தயாரிப்பாளர் பிளாய் கூறியிருக்கிறார்.

அவர் கூறும் பொழுது “டெஸ்ட் போட்டியின் முதல் மற்றும் இரண்டாம் நாள் வானிலை அறிக்கை பார்க்கும் பொழுது, அது நன்றாக இல்லை. நான்காம் நாளில் சூரியன் வெளியே வர ஆரம்பிக்கலாம். அப்பொழுது ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் உதவி கிடைக்கும். மேலும் பொதுவாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல சாதகம் இருக்கும். எவ்வளவு மழை ஆபத்து இருக்கிறது எவ்வளவு மழை பெய்யும் என்பது குறித்து என்னால் துல்லியமாக சொல்ல முடியாது.

மூன்றாவது நாளில் போட்டி காலை 10 மணிக்கு துவங்குகிறது என்றால், எங்களுக்கு ஆடுகளத்தில் வேலை செய்ய நிறைய நேரம் கிடைக்காது. எனவே காலையில் முதல் மூன்று மணி நேரம் குளிரான சூழ்நிலையில் பேட்டிங் செய்வது கடினமான ஒன்றாக இருக்கும். இதன் காரணமாக முதல் இரண்டு நாட்களில் பந்துவீச்சாளர்கள் நிறைய பயனடைவார்கள்!” என்று கூறியுள்ளார்.

இவர் தெரிவித்துள்ள கருத்துக்களை வைத்து பார்க்கும் பொழுது, இந்திய அணி சிறப்பான வேகப்பந்துவீச்சு தாக்குதலை அமைக்கவே விரும்பும். மேலும் ஒரே ஒரு சுழற் பந்துவீச்சாளரை மட்டுமே கொண்டு செல்லும். அவர் ரவீந்திர ஜடேஜாவாக இருக்க வாய்ப்பு அதிகம். அஸ்வினுக்கு இந்த முறை வாய்ப்பு குறைவுதான்!