INDvsSA.. சூரியகுமார் ருத்ரதாண்டவ சதம்.. ரோகித் கோலி சாதனைகள் காலி.. இந்தியா அதிரடி ரன் குவிப்பு!

0
526
Surya

இன்று தென் ஆப்பிரிக்க வாண்டரஸ் மைதானத்தில் இந்திய தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் மூன்றாவது மற்றும் தொடரில் கடைசி டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. மேலும் இந்த போட்டியோடு சேர்த்து தொடர்ச்சியாக சூரியகுமார் ஆறாவது முறையாக டாஸ் தோற்றார். டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இந்த நிலையில் சுப்மன் கில் 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த முதல் பந்தியிலேயே திலக் வர்மா கோல்டன் டக் அடித்து வெளியேறினார். இந்திய அணி 29 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை இழந்தது.

இதற்கு அடுத்து ஜெய்ஷ்வால் மற்றும் சூரியகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து அணியை மீட்டதோடு அதிரடியாகவும் விளையாடி தேவையான ஸ்கோரை கொண்டு வந்தார்கள். பவர் பிளேவில் இந்தியா 60 ரன்கள் தாண்டியது.

இந்த நிலையில் மிகச் சிறப்பாக விளையாடிய ஜெய்ஷ்வால் தனது மூன்றாவது சர்வதேச டி20 அரை சதத்தை கடந்து, 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

கேப்டன் சூரியகுமார் யாதவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் அரை சதத்தை எட்டினார்.

மேலும் தொடர்ந்து தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 55 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்களுடன் தனது நான்காவது சர்வதேச டி20 சதத்தை எட்டினார். அடுத்த பந்தில் ஆட்டமும் இழந்தார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் நான்கு சதங்கள் அடித்து இருக்கிறார்கள். தற்பொழுது சூரியகுமார் நான்கு சதம் அடித்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றதோடு, குறைந்த இன்னிங்ஸ்களில் 4 சர்வதேச டி20 சதம் அடித்த பேட்மேன் என்கின்ற சாதனையையும் படைத்தார். இறுதியாக இந்திய அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருக்கிறது.

இது மட்டும் இல்லாமல் இந்த போட்டியில் கேசவ் மகாராஜ் ஓவரில் ஒரு சிக்சர் அடித்த பொழுது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியை இரண்டாவது இடத்தை சூரியக்குமார் யாதவ் பிடித்தார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர் அடித்த மூன்று பேட்ஸ்மேன்கள் :

ரோகித் சர்மா – 140 இன்னிங்ஸ் – 182 சிக்ஸர்
சூரியகுமார் யாதவ் – 56 இன்னிங்ஸ் – 118 சிக்ஸர்
விராட் கோலி – 107 இன்னிங்ஸ் – 117 சிக்ஸர்