INDvsSA.. “நடக்க போறது கிரிக்கெட் இல்ல.. ஹெவி வெயிட் குத்துச்சண்டை.. இதான் காரணம்” – தெ.ஆ கோச் பேட்டி!

0
468
Conrod

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் கடினமான நாடான தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடுகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி பாக்சிங் டே டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்குகிறது. இதற்கு அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி துவங்குகிறது.

- Advertisement -

இந்திய அணியின் கடந்த தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணங்களில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்த நிலையில் ஒரு போட்டியை குறைத்து தற்பொழுது இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடராக நடத்தப்படுகிறது. இது குறித்து நிறைய விமர்சனங்கள் வெளியே இருக்கின்றன.

மேலும் தென் ஆப்பிரிக்க அணியின் முக்கிய வெகபந்துவீச்சாளர்களான ரபாடா மற்றும் நிகிடி இருவரும் விளையாட மாட்டார்கள் என்று இருந்த நிலையில், தற்போது உடல் தகுதி பெற்று அணியுடன் இருக்கிறார்கள். இந்த முறை அவர்களுக்கு அதிகப்படியான வேகப்பந்து வீச்சு பலமாக ஜெரால்ட் கோட்சி இருக்கிறார்.

நடக்க இருக்கும் டெஸ்ட் தொடர் குறித்து பேசி உள்ள தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் கான்ராட் கூறும் பொழுது “ரபாடா மற்றும் நிகிடி இருவரும் தற்பொழுது எங்களுடன் இருக்கிறார்கள். அதாவது அவர்கள் போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். இவர்களுக்கு பதில் மாற்றாக நாங்கள் யாரையும் அழைக்கவில்லை. எங்களிடம் சிறந்த 15 பேர் கொண்ட அணி இருக்கிறது என்று நம்புகிறோம்.

- Advertisement -

ஜெரால்டு கோட்சியை பொறுத்தவரை பந்து எந்த நிறமாக இருந்தாலும் அவர் செயல்படும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும். அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட் முன்னேறி செல்வதற்கு இன்னொரு படியாகும். தென் ஆப்பிரிக்கர்களுக்கு உரிய சிறப்பான வேகம் அவருக்கு இருக்கிறது. ஓரிரு ஆண்டுகளில் அவர் தென் ஆப்பிரிக்க வேகப் பந்துவீச்சை வழிநடத்துவார்.

இந்தியா இங்கு டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்கின்ற சரித்திர சாதனையை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறோம். இந்த முறை ஏதும் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் விரும்புகிறோம்.

இந்தத் தொடரை பொறுத்தவரையில் சற்று அதிக அழுத்தமானது. காரணம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மட்டுமே நடக்கிறது. நீங்கள் முதல் போட்டியில் தோற்று விட்டால் அதிக அழுத்தம் உருவாகிவிடும். உங்களால் அங்கிருந்து தொடரை வெல்ல முடியாது. அதேபோல் நீங்கள் முதல் டெஸ்ட் போட்டியை வென்று விட்டால், உங்களால் இந்த தொடரை இழக்க முடியாது. எனவே இது ஒரு ஹெவி வெயிட் குத்துச்சண்டை போல இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!