INDvsSA.. நாளை போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன்.. கில் வெளியே..திலக் உள்ளே.. மாற்றத்திற்கு காரணம் என்ன?

0
431
Gill

தென் ஆப்பிரிக்காவில், இந்திய தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி, நேற்று டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நாளை தொடரின் இரண்டாவது போட்டியில் கியூபர்கா செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு தொடரை கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். தோற்கும் அணியால் தொடரை சமன் செய்யும் வாய்ப்பு மட்டுமே இருக்கும்.

- Advertisement -

நாளை போட்டி நடைபெறுகின்ற மைதானத்தின் ஆடுகளம் பொதுவாக பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம். மேலும் ஆடுகளத்தின் இரண்டாம் பகுதியில் சுழற் பந்துவீச்சு எடுபடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக டாஸ் ஜெயிக்கின்ற அணி முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்யும்.

ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் சுழற் பந்துவீச்சு எடுபடும் என்கின்ற காரணத்தினால், ஆறாவது பந்துவீச்சாளராக ஒருவரை இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயரை வெளியில் வைத்து, மூன்றாவது இடத்திலோ அல்லது நான்காவது இடத்திலோ திலக் வர்மாவை விளையாட வைப்பது சரியான ஒன்றாக இருக்கும். அவரால் ஆட்டத்தில் இரண்டு ஓவர்கள் ஆப் ஸ்பின் வீச முடியும். எனவே கில்லையும் வெளியில் வைப்பது நல்லது.

- Advertisement -

மேலும் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் அவர் விளையாடுவது உறுதி. ஆனால் இரண்டாவது ஸ்பின்னராக குல்தீப் யாதவ் இல்லை ரவி பிஸ்னாய் இருவரில் யார் இடம்பெறுவார்கள் என்பதுதான் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ரவி பிஸ்னாய் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடியதால் குல்தீப் யாதவ் விளையாடலாம். ஆனால் இவர் பவர் பிளேவில் பந்து வீச மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட் கீப்பராக கீழ் வரிசையில் விளையாடும் ஜிதே ஷ் சர்மா டி20 உலகக் கோப்பையின் இந்திய பிளேயிங் லெவனில் இடம் பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே அவரையே தொடர்ச்சியாக விளையாட வைக்கலாம். வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ் இடம் பெறுவார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ஜெய்ஸ்வால், ருதுராஜ், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரவி பிஸ்னாய், அர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் முகமது சிராஜ்.