INDvsSA.. நாளை இந்திய பிளேயிங் லெவன்.. முக்கிய 3 மாற்றங்கள்.. தொடரை காப்பாற்றுமா?

0
327
ICT

தற்பொழுது சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் அந்த நாட்டின் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இதில் முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட இரண்டாவது போட்டியில் நேற்று தென் ஆப்பிரிக்கா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே தென் ஆப்பிரிக்கா மட்டுமே தொடரை வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணி தொடரை சமன் செய்யவே வாய்ப்பு உண்டு.

- Advertisement -

இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் எப்பொழுதுமே முக்கியமானது. எனவே தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தை தோல்வியுடன் ஆரம்பிப்பது இந்திய அணிக்கு நல்ல விதமாக இருக்காது. மேலும் கடந்த இந்திய தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் முழுக்க தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்திய அணி கடந்த போட்டியில் செய்திருந்த சில பரிசோதனை முயற்சிகளை கைவிட்டு, சில வீரர்களை வெளியேற்றி, சில வீரர்களை உள்ளே கொண்டு வந்து, தொடரை சமன் செய்ய வேண்டியது முக்கியமானது ஆகும்.

கடந்த போட்டியில் ருதுராஜ் நீக்கப்பட்டு கில் துவக்க ஆட்டக்காரராக கொண்டுவரப்பட்டார். மேலும் டி20 கிரிக்கெட்டில் தற்போது முதல் இடத்தில் இருக்கும் பந்துவீச்சாளரான ரவி பிஸ்னாய் சேர்க்கப்படாமல் குல்தீப் விளையாடினார்.

- Advertisement -

இந்த இரண்டு மாற்றங்களும் நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது. கில் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். குல்தீப் யாதவால் ரன்களை கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

எனவே நாளைய போட்டியில் கில் இடத்தில் ருதுராஜ் மற்றும் குல்தீப் இடத்தில் ரவி பிஸ்னாய் இருவரும் இடம் பெறுவது அவசியமாகிறது. மேலும் புதிய பந்தில் சிறப்பாக வீசக்கூடிய தீபக் சகர் உள்ளே வந்தால், பேட்டிங் நீளம் அதிகரிக்கும். மேலும் சமீப காலத்தில் சிறப்பாக செயல்படாத அர்ஸ்தீப் சிங்குக்கு ஒரு மாற்றாக அமையும்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கு வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ஜெய்ஸ்வால், ருதுராஜ், திலக் வர்மா சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர், ரவி பிஸ்னாய், முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார்.