INDvsSA.. 36ஆண்டு சாதனை.. அடித்து நொறுக்கிய சாய் சுதர்சன்.. 2வது போட்டியிலும் தொடரும் அதிரடி!

0
1643
Sai

ஒருபுறம் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடந்து கொண்டு இருக்க, இன்னொரு புறத்தில் தென் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிராக அந்த நாட்டில் இந்திய அணி இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தற்பொழுது விளையாடி வருகிறது.

இன்று இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் ஸ்ரேயாஸ் டெஸ்ட் அணியுடன் இணைய சென்றுவிட்ட காரணத்தினால், ரிங்கு சிங்குக்கு தொப்பி வழங்கப்பட்டு அறிமுகமானார்.

- Advertisement -

இந்த நிலையில் துவக்க வீரராக வந்த ருத்ராஜ் முதல் பந்தில் பவுண்டரி அடித்து இரண்டாவது பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க, திலக் வர்மா 30 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஆனால் இன்று தன்னுடைய இரண்டாவது சர்வதேச போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன், தன்னுடைய முதிர்ச்சியான ஆட்டத்தை ஒரு பக்கத்தில் வெளிப்படுத்தி அபாரமான முறையில் விளையாடினார்.

- Advertisement -

விடவேண்டிய பந்துகளை விட்டு, அடிக்க வேண்டிய பந்துகளை மிகச் சரியான திசையில் அடித்து, தன்னுடைய தரமும் திறமையும் எப்படியானது என்று தொடர்ச்சியாக களத்தில் நின்று காட்டிக் கொண்டு இருந்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 65 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன், தொடர்ச்சியாக தன்னுடைய இரண்டாவது போட்டியிலும் அரை சதம் அடித்து அசத்தினார்.

தன்னுடைய அறிமுகப் போட்டியை தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் அரை தம் அடித்ததின் மூலமாக, 36 ஆண்டுகளுக்கு முன்பாக நவ்ஜோத் சிங் சித்து அறிமுகப் போட்டியை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு அரை சதங்கள் அடித்திருந்த சாதனையை இந்திய வீரராக சமன் செய்தார்.

சாய் சுதர்சன் விளையாடி வரும் விதத்தை பார்க்கும் பொழுது, இர்பான் பதான் கூறியதைப் போல அடுத்த பத்து முதல் 15 ஆண்டுகள் அவர் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பது போல தெரிகிறது!

- Advertisement -