IND vs SA.. 2வது டெஸ்ட்.. 2 மாற்றங்களுக்கு வாய்ப்பு.. உத்தேச இந்திய பிளேயிங் லெவன்

0
8379
ICT

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் தற்பொழுது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில், முதலில் விளையாடிய போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

நடப்பு டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகள் கொண்ட தொடராக நடக்கின்ற காரணத்தினால், இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்து விட்டதால், இனி இந்திய அணியால் தொடரை வெல்ல முடியாது. அடுத்த போட்டியை வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்யவும் முடியும்.

- Advertisement -

எனவே இந்திய அணி இந்த தொடரில் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக ரோகித் சர்மாவின் வியூகங்கள் சூழ்நிலைக்கு ஏற்றது போல் அமையாதது பெரிய விமர்சனமானது. டீன் எல்கர் ஷார்ட் பந்துகளில் பலவீனம் கொண்டவர் என்றாலும், ரோகித் சர்மா அதை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் அவரது கேப்டன் பதவியும் ஆபத்தில் இருக்கிறது என்று கூறலாம்.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரையில், பேட்டிங் யூனிட்டில் பெரிய மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஏனென்றால் வெளியில் இன்னும் அறிமுகமாகாத அபிமன்யு ஈஸ்வரன் மட்டுமே இருக்கிறார். எனவே அவருக்கு இரண்டாவது போட்டியில் அதிரடியாக வாய்ப்பு தருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

அதே சமயத்தில் இந்திய அணியின் பௌலிங் யூனிட்டில் இரண்டு மாற்றங்களை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் இருக்கிறார்கள்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்கின்ற காரணத்தினால், தனது உயரத்தின் காரணமாக வாய்ப்பு பெற்ற பிரசித் கிருஷ்ணா சரிவர அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே இவர் தன் வாய்ப்பை இழந்து, முகேஷ் குமார் இடம்பெற வேண்டிய அவசியம் உருவாகிறது.

இதற்கடுத்து கழுத்து பிடிப்பால் பாதிக்கப்பட்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தில் அணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயமும் உருவாகி இருக்கிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டியில் இரண்டு முறையும் மிக மோசமான முறையில் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணி இந்த இரண்டு மாற்றங்களை செய்து களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாக்கூர், பும்ரா சிராஜ் மற்றும் முகேஷ் குமார்.