INDvsNZ.. போட்டி நடக்காவிட்டால் யார் வெற்றி? மழை வாய்ப்பு ரிசர்வ் டே உண்டா? – முழு தகவல்கள்!

0
5600
ICT

இந்தியாவில் தற்பொழுது நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை பலப்பரிட்சை நடத்துகின்றன.

இந்திய அணி லீக் சுற்றில் மொத்தம் ஒன்பது ஆட்டங்களை வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தும், நியூசிலாந்து அணி ஒன்பது ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களை வென்று நான்காவது இடத்தை பிடித்தும், அரையிறுதியில் நாளை மோதுகின்றன!

- Advertisement -

நாளை மும்பை மைதானம் மற்றும் ஆடுகளம், மழைக்கான வாய்ப்பு, மழைக் குறுக்கிட்டால் ரிசர்வ் டேவில் எவ்வாறு போட்டி தொடரும் என்பது குறித்து இந்தச் சிறிய கட்டுரையில் பார்க்கலாம்.

மும்பை மைதானம் மற்றும் ஆடுகளம்:

போட்டி பகலில் ஆரம்பிக்கின்ற காரணத்தினால் பந்தில் பெரிய அளவு ஸ்விங் ஆரம்பத்தில் இருக்காது. அதேசமயத்தில் இரவில் இரண்டாவது பகுதியில் ஆட்டத்தில் புதிய பந்தில் மின்விளக்குகளின் கீழ் பந்து ஸ்விங் ஆகும். எனவே டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வது சரியாக இருக்கும்.

- Advertisement -

அதே சமயத்தில் சிறிய மைதானமான மும்பை மைதானத்தில் சிவப்பு மண் ஆடுகளம் இருக்கின்ற காரணத்தினால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் குல்தீப் யாதவ் போன்ற மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமான சூழல் கொஞ்சம் காணப்படும்.

மும்பை வான்கடே வானிலை:

குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் காற்று அடிக்கும் மேலும் 44% ஈரப்பதம் இருக்கும். மழை அச்சுறுத்தல் முற்றிலும் கிடையாது.

ரிசர்வ் டே உண்டா? ஓவர்கள் எப்படி கொடுக்கப்படும்?

இரண்டு அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருக்கிறது. போட்டி ஏதாவது காரணங்களால் தடைப்பட்டால் அடுத்த நாள் நடைபெறும். ஆனால் அதுவே கடைசி நாள்.

போட்டியில் ஒரு அணி 50 ஓவர்கள் விளையாடி, மற்றொரு அணி தொடர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால், போட்டி எந்த இடத்தில் நின்றதோ, அந்த இடத்தில் இருந்து அடுத்த நாள் நடைபெறும்.

அதே சமயத்தில் ஆட்டம் துவங்குவதற்கு முன்பாகவோ இல்லை பின்பாகவோ ஓவர்கள் குறைக்கப்பட்டு இருந்தால், குறைக்கப்பட்ட ஓவர்களில் இருந்தே அடுத்த நாள் ஆட்டம் நடைபெறும். அடுத்த நாளிலும் முடிவு தெரியாமல் போகும் பொழுது, லீக் சுற்றில் சிறப்பான செயல்பாட்டை கொண்டு இருந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்!