INDvsENG டெஸ்ட் சீரிஸ்.. இந்திய அணி அறிவிப்பு.. 22வயது வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. 2 முக்கிய மாற்றம்!

0
1316
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது.

மேற்கொண்டு இந்தத் தொடர் நடைபெற்று மார்ச் மாதம் மத்தியில் முடிவுக்கு வருகிறது. இரண்டு பெரிய நாடுகள் மோதிக் கொள்ளும் மெகா டெஸ்ட் தொடர் என்கின்ற காரணத்தினால் இந்த தொடருக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதே சமயத்தில் இங்கிலாந்து அணி வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் தொடர முடியும். தற்போது புள்ளி பட்டியலில் மிகவும் கீழே இங்கிலாந்து அணி இருக்கிறது.

இந்தத் தொடருக்காக இங்கிலாந்து மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து தற்பொழுது அபுதாபியில் ஒன்பது நாட்கள் பயிற்சி முகாமை நடத்துகிறது. மேலும் முன்கூட்டியே அணியை அறிவித்துவிட்டது.

இந்த நிலையில் இன்று ரோகித் சர்மா தலைமையில் 16 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணியில் முகமது சமி உடல் தகுதியை எட்டாத காரணத்தினால் சேர்க்கப்படவில்லை. பதினாறாவது வீரராக ஆவேஸ் கான் அணியில் இருக்கிறார். மேலும் பும்ரா, சிராஜ் உடன் முகேஷ் குமார் தொடர்கிறார்.

- Advertisement -

இந்திய பேட்டிங் யூனிட் பொறுத்த வரையில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் சுப்மன் கில், விராட் கோலி, கேஎல்.ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இருக்கிறார்கள். ஸ்பின்னர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் இருக்கிறார்கள்.

இதில் ஆச்சரியப்படத்தக்க முடிவாக விக்கெட் கீப்பர் இசான் கிசானை தேர்வு செய்யவில்லை. கேஎஸ்,பரத் முதல் விக்கெட் கீப்பராகவும், இரண்டாவது விக்கெட் கீப்பராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வலதுகை பேட்ஸ்மேன் 22 வயதான துருவ் ஜுரல் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர் கடந்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:

கேப்டன் ரோஹித் சர்மா, ஜெயஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்ராகுல், கேஎஸ்.பரத், துருவ் ஜுரல், ரவீந்திர ஜடேஜா,ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ட்பரீத் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான்.